பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

permanent storage

1103

Persistence


permanent storage:நிலைச் சேமிப்பி;நிலைத் தேக்கம்.

permanent swap file:நிலைத்த மாறுகொள் கோப்பு:விண்டோஸ் இயக்க முறைமையில்,மெய்நிகர் நினைவகச் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தப் படும் தொடர்ச்சியான வட்டுப் பிரிவுகளில் எழுதப்பட்ட ஒரு கோப்பு.

permission:அனுமதி:ஒரு பிணைய முறை அல்லது பல் பயனாளர் கணினி அமைப்புகளில் தன்னுடைய பயனாளர் கணக்கு மூலமாக ஒரு தரவுவை/வசதியை அணுகிப் பெற ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு வழங்கப்படுவது.இத்தகைய அனுமதிகளை முறைமை நிர்வாகி அல்லது அதிகாரம் தரப்பட்ட வேறு நபர் பயனாளருக்கு வழங்குகிறார்.இந்த அனுமதி கள் பற்றிய தரவு மையக் கணினியில் பெரும்பாலும் அனுமதிக் குறிப்பேடு permission log என்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன.பயனாளர் கணினி அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வளத்தை(தரவு/வசதி)அணுக முற்படும் போது அனுமதிக் குறிப்பேட்டில் சரி பார்க்கப்பட்டு முடி வெடுக்கப்படுகின்றன.

permission,access:அணுகு அனுமதி.

permutation:வரிசை மாற்ற வகை:ஒரு பெரிய தொகுதியில் உள்ள பொருள்களின் ஒரு வகையான சேர்ப்பு முறை.சான்றாக, 1, 2, 3 என்னும் தொகுதி எண்களில் 6 வகையான பெர்முட்டேஷன்களைச் செய்ய முடியும். 12, 21, 13, 31, 23 மற்றும் 32.

perpendicular recording:செங்குத்துப் பதிகை:காந்த ஊடகங்களின் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான ஒரு வழி முறை.இம்முறையில் பதிவு செய்யும் தளத்துக்குச் செங்குத்து திசையில் அமையும் காந்தத் துருவங்களின் போக்கு,துண்மி(பிட்)மதிப்புகளைத் தீர்மானிக்கின்றன.

Persistence:உறுதிப்பாட்டுத் திறன்;நீடிப்பாற்றல்:ஒரு செறிவற்ற எரியத்தின்(Phosphor)ஒளியாற்றல் நீடிப்புத் திறன்.ஒர் எரியத்திற்கு எலெக்ட்ரான் துப்பாக்கிகள் மூலம் கிளர்ச்சியூட்டிய பிறகு அது மங்கத் தொடங்குவதால்,அது மிகவும் மெதுவாக மங்குவதற்கு ஒரு நீண்ட உறுதிப்பாட்டுத் திரை உதவுகிறது.