பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

photo plotter

1110

photonics


ஒன்றன்மேல் ஒன்று படிந்துள்ள அல்லது அடுத்தடுத்துள்ள செவ்வகப் பரப்புகளின் ஒரு தோரணியில் ஒளிபடும்படி செய்து ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்று வழித்திரையை உண்டாக்குதல்.

photo plotter : ஒளிப்பட வரைவி : அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை வடிவமைப்புக்கும், ஒருங்கிணைந்த மின்சுற்று வழித்திரைகளுக்கும் ஒளிப்பட முறைப்படி உயர்ந்த அளவு துல்லியமான கலைப்படைப்பு மாதிரிகளை உருவாக்குவதற்கான வெளிப்பாட்டுச் சாதனம்.

Photo sensitive : ஒளியுணர்வு.

photo typesetter : ஒளிப்பட அச்சுக் கோப்பி;ஒளி அச்சுக்கோப்பி : வாசகங்களைத் தொழில்முறையான உயர்தர அச்செழுத்துகளாக மாற்றக் கூடிய கணினிக் கட்டுப்பாட்டுச் சாதனம். பெரும்பாலான நூல்கள், ஒளிப்பட அச்சுக் கோப்பிகளில் அச்சுக்கோக்கப்படுகின்றன.

photographic : ஒளிப்படம்.

photo lithography : ஃபோட்டோ லித்தோகிராஃபி : ஒரு சிப்புவில் உள்ள மின்சுற்றுப் பாதைகள் மற்றும் மின்னணுப் பொருள்களின் வடிவமைப்பை தகடின் மேற்பரப்புக்கு மாற்றுகின்ற லித்தோகிரஃபி நுட்பம். சிப்புவின் ஒவ்வொரு அடுக்குக்கும் ஒரு ஒளிப்பட மூடி உருவாக்கப்படும். தகட்டின் மீது ஒளி உணர் திரைப்படப் பூச்சு அளிக்கப்பட்டு ஒளிப்பட மூடி மூலம் ஒளிரும் ஒலியில் காட்டப்படும். தகடினைச் சென்றடையும் ஒளி, படத்தை கடினப் படுத்துகிறது. தகட்டை அமிலத்தில் அல்லது வெப்ப கியாஸ்களில் நனைத்தால் கடினப்படுத்தப்படாத பகுதி செதுக்கி எறியப்படுகின்றன.

photomask : ஒளிப்பட மூடி : ஒளி புகக்கூடிய தகட்டின் தெளிவற்ற உருவம். ஒரு சாதனத்திலிருந்து வேறொன்றுக்கு ஒரு உருவத்தை மாற்ற வேண்டுமென்றால் ஒளி வடிகட்டி பயன்படுத்தப்படுகிறது.

photomicrography : ஒளிப்பட நுண்ணியல் : நுண்காட்டிப் படங்களை ஒளிப்படமெடுத்தல்.

photon : போட்டோன்;ஒளித்துகள் : ஒளியின் அடிப்படைப் பகுதிகள். அதன் மின்னணு இணைப்பகுதியைவிட அது சிறியது. ஆகவே போட் டோனிக் மின்சுற்றுக்குள்ளேயே அதனால் அதிக அளவு சிற்றுரு வாக்க முடியும்.

photonics : ஒளிப்படவியல் : மின்சாரத்திற்குப் பதிலாக