பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

photo composition

1109

photo pattern generation


பிட்ட நேரம் ஒளிரக்கூடிய ஒர் எரியமே ஆகும். புள்ளிகள் ஒர் உருக் காட்சியை உருவாக்கப் பயன்படுகின்றன.

photo composition : ஒளிப்பட அச்சுக்கோப்பு : அச்செழுத்துகளைக் கோப்பதற்கு மின்னணுவியல் செய்முறைப் படுத்துதலைப் பயன்படுத்துதல். அச்செழுத்துகளை வரையறுப்பதையும், அமைப்பதையும், அதனை ஒளிப்படச் செய்முறைப்படித் தயாரிப்பதையும் இது உள்ளடக்கும்.

photoCD : ஃபோட்டோ சிடி;ஒளிப்பட சிடி;ஒளிப்படக் குறுவட்டு : கோடாக் நிறுவனம் உருவாக்கய இலக்கமுறையாக்கத் தொழில் நுட்பம், 35மிமீ சுருள், நெகட்டிவ்கள், படப்பலகைகள் (slides), வருடப்பட்ட படிமங்கள் ஆகிய வற்றை ஒரு குறுவட்டில் சேமிக்கும் முறை. கோடாக் ஃபோட்டோ சிடி இமேஜ் பேக் என்னும் கோப்பு வடிவாக்கமுறை என்றழைக்கப்படுகிறது. சுருக்கமாக பீசிடி என்பர். பெரும்பாலான ஒளிப்பட, படச் சுருள் தொழி லகங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. ஃபோட்டோ சிடியில் சேமிக்கப் படும் படிமங்களை சிடி-ரோம் மற்றும் பீசிடி கோப்புகளைப் படிக்கும் மென்பொருள் உள்ள எந்தவொரு கணினியிலும் பார்க்கமுடியும். சி. டி-க்களில் பதியப்பட்டுள்ள படிமங்களைப் பார்வையிடுவதற்கென வடி வமைக்கப்பட்ட எந்தவொரு கருவியிலும் இப்படிமங்களைக் காணமுடியும்.

photoconductor : ஒளியில் கடத்தி : ஒளிபடும்போது கடத்தும் திறம் அதிகரிக்கின்ற ஒரு பொருள். ஒளியில் கடத்திகள் பெரும்பாலும் ஒளி யுணர்வுகளில் பயன்படுத்தப் படுகின்றன. ஒளியிழை வடங்களில் ஒளியை ஏற்று அதனை மின்துடிப்பாக மாற்றும் பணியை இவை செய்கின்றன.

photoelectric devices : ஒளிப்பட மின்னியல் சாதனங்கள் : கண்ணுக்குப் புலனாகும் அகச்சிவப்பு அல்லது புறவூதாக் கதிர்வீச்சின் விளைவாக ஒரு மின்னியல் சைகையினை உண்டாக்கும் சாதனங்கள்.

photo editor : ஒளிப்பட தொகுப்பி : வருடப்பட்ட ஒளிப்படம் போன்ற படிமங்களை இலக்கமுறை வடிவில் கையாள் வதற்கான வரைகலைப் பயன்பாடு.

photo pattern generation : ஒளிப் படத் தோரண உருவாக்கம் :