பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phone connector

1108

phosphor


BIOS). ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளுக்கு உகந்தது. பீசி வார்ப்புக் கணினி களுக்கான மிகவும் செல்வாக்குப் பெற்ற ரோம் பயாஸ். ஐபிஎம் ஒத்தியல் புக் கணினிகளிடையே, சந்தையில் அறிமுகப்படுத்தப் பட்டவுடனேயே ஃபோனிக்ஸ் மிகவும் புகழ்பெற்று விட்டது.

பேசி இணைப்பி

phone connector : பேசி இணைப்பி : நுண்பேசி அல்லது ஒரு இணைதலைபேசி (Head phone) போன்ற ஒரு சாதனத்தை ஒரு கேட் பொலிக் கருவி அல்லது கேட்பொலித் திறனுள்ள தகவி ஆகியவற்றுடன் இணைக்கப் பயன்படும் ஒர் உடன் இணைப்பு.

phone dialer : தொலைபேசிச் சுழற்றி.

phone hawk : தொலைபேசிக் கொள்ளையன் : மோடெத்தின் மூலம் ஒரு கணினியை அமைத்து தரவுகளை நகலெடுப்பது அல்லது அழித்தலைச் செய்பவனைக் குறிப்பிடும் குழு உச் சொல்.

phoneme occurance : சொல்லில் எழுத்து வருகை.

Phonemes : ஒலியன்கள் : மனிதர் பேசும்முறையில் அடங்கியுள்ள மாறுபட்ட ஒலிகள். பேசும் சொற்களின் மிகச்சிறிய அலகுகள். எடுத்துக்காட்டு : க், ச், ஷ்.

phonetic key board : ஒலியியல் விசைப்பலகை.

Phonetic System : ஒலியியல் முறை : குரல் தகவல் (ஒலியன்கள்) அடிப்படையிலான தரவுகளைப் பயன்படுத்திப் பேச்சு மொழி போன்ற ஒலிகளை உண்டாக்கும் முறை.

phonological analysis : ஒலியமைப்புப் பகுப்பாய்வு.

phosphor : எரியம் : பூமியில் அரிதாகக் கிடைக்கும் பொருள். இது எதிர் மின்கதிர்க் குழலின் உள்முகப்பில் பூசுவதற்குப் பயன்படுகிறது. ஒரு செய்தி

அறிவிப்பின் எலெக்ட்ரான் துப்பாக்கிகள் உண்டாக்கும் ஒளியினை இது இருத்தி வைத்துக் கொள்கிறது. திரையில் காணும் ஒவ்வொரு புள்ளியும் உண்மையில் ஒரு குறிப்