பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pipelining

1118

Pitch


செயற்படும் சுழல் செயற்பணி. கணினிகளின் வேகத்தை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு கணினி நிரலை பல பகுதிகளாகப் பகுத்து, அவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்ற இது உதவுகிறது.

pipelining : முறைவழிப்படுத்தல் : 1. நினைவகத்திலிருந்து நிரல்களைக் கொணர்ந்து குறி விலக்கம் செய்து செயல்படுத்துவதில் ஒரு வழிமுறை. இம்முறையில் ஒரே நேரத்தில் பல நிரலாணைகளை வெவ்வேறு செயல் நிலைகளில் கொணர்ந்து குறிவிலக்கம் செய்து செயல்படுத்த முடியும். இதனால் ஒரு குறிப்பிட்ட நிரலை வேகமாகச் செயல்படுத்த முடியும். நுண் செயலி தேவையின்றிக் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நுண்செயலி ஒர் நிரலையைச்செயல்படுத்தி முடிக்கும்போது அடுத்த நிரல் தயாராக இருக்கும். 2. இணை நிலைச் செயலாக்கத்தில் (parallel processing) நிரல்கள் ஒரு செயலாக்க அலகிலிருந்து இன் னொன்றுக்கு அனுப்பி வைக்கப்படும். தொழிலகங்களில் தொகுப்புப் பணித்தொடர் அமைப்பு (assembly line) போன்றது. ஒவ்வோர் அலகும் ஒரு குறிப்பிட்ட வகைச் செயல்பாட்டில் திறன் பெற்றிருக்கும்.

piracy : கள்ளத்தனமான : தனிப்பட்ட அல்லது வணிகப் பயன் பாட்டுக் காக சட்டத்தை மீறி மென்பொருளை நகலெடுத்தல்.

piracy investigaters : களவினைக் கண்டுபிடிப்பவர்கள்.

pirate : திருட்டு, களவு : உரிமை பெற்ற மென்பொருளை திருடுகின்ற (அல்லது அனுமதியின்றி நகலெடுக்கின்ற) ஒரு நபர் அல்லது நிறுவனம். புதிய இந்தி"எழுத்தச்சு"ஒன்றுக்கு'Software Pirate” என்று பெயரிடப் பட்டுள்ளது.

. pit : . பிட் : பேக்ஐடீ (pack IT) என்னும் முறையில் இறுக்கிச் சுருக்கப் படும் ஆவணக் கோப்புகளின் வகைப்பெயர் (extension).

pit and land : குழி;சமதளம் : குறுவட்டில் 0, 1 பிட்டுகளை எழுதும் இடம்.

Pitch : அச்சுச் செறிவு;எழுத் தடர்வு : அச்சிட்ட வரியிலுள்ள எழுத்துகளின் செறிவரைவு. இது, பொதுவாக ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் என்ற வீதத்தில் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு : 10 செறிவளவு என்பது ஒவ்வொரு அங்குலத்திலும் 10 எழுத்துகள் அடங்கியுள்ளன என்று பொருள்படும்.