பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PLA

1120

planar transistor


நிரல். பீகேஸிப் (PKZIP) என்னும் நிரல் மூலம் இறுக்கிச் சுருக்கிய கோப்புகளை விரிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் பீகேஸிப், பீகே அன்ஸிப் இரண்டும் சேர்ந்தே கிடைக்கும். பீகேவேர் (PKware) என்னும் நிறுவனம் இவற்றை வெளியிடுகிறது. இந்த மென்பொருள்களை இந்த நிறுவனத்தின் அனுமதி யின்றி வணிகப் பயன்பாடுகளுக்காக வெளியிட முடியாது.

PLA : பிஎல்ஏ;நிரலாக்கு தருக்கக் கோவை : "செயல் முறை வகுத் திடத்தக்க தருக்க முறை வரிசை"என்று பொருள் படும்"Programmable Logic Array"என்ற ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர். இது, ஒரு குறிப்பிட்ட அலுவல் பணியை மட்டுமே செய்வதற்குச் செயல் முறைப்படுத்தப்பட்டுள்ள, ஒரு தரப்படுத்திய தருக்கமுறை இணைவனத்தைப் பயன்படுத்துகிற, படிப்பதற்கு மட்டுமேயான நினைவகத்துக்கு (Rom) மாற்றாகப் பயன்படக்கூடியது.

plaintext : நேரடிவாசகம் : வழக்கமான செய்தியை அதன் மூலப்பொருள் வடிவில் குறிப்பிடுவதற்கு மறைமொழி வல்லுநர்கள் பயன்படுத்தும் சொல்.

planar : ஒருதள நிலை : 1. கணினி வரைகலையில் பொருள்கள் ஒரே தளத்தில் தோற்றமளிப்பவை. 2. குறை கடத்திப் பொருள்கள் உற்பத்தி முறையில் செயலாக்கத்தின் போது முழுமையும் சிலிக்கான் மென் தகடுகளின் மேற்பரப்பின் மூலத்தட்டை அமைப்பு மாறாமல் பராமரித்தல். மின்னோட்டப் பாய்வைக் கட்டுப்படுத்தும் தனிமங்களடங்கிய வேதியல் பொருட்கள் இந்த மேற்பரப்பின் கீழ் பரப்பப்பட்டுள்ளன.

planar area : பிளேனர் பகுதி : கணினி வரைகலையில், எல்லைகள் உள்ள பொருள். சதுரம் அல்லது பல்கோணம் போன்றது.

planar transistor : ஒருதள மின்மப் பெருக்கி : மின்மப் பெருக்கிகளுள் ஒரு தனிச்சிறப்பான வகை. மின்மப் பெருக்கியின் மூன்று பகுதிகளும் (திரட்டி, உமிழி, அடிவாய்) குறைகடத்திப் பொருளின் ஒற்றை அடுக்கில் இழையப் பட்டிருக்கும். வழக்கத்தைவிட அதிக அளவிலான வெப்பம் வெளியேறுவதற்கேற்ற வகையில் ஒருதள மின்மப் பெருக்கியின் கட்டமைப்பு அமைந்துள்ளது. எனவே இது மின்சக்தி மின்மப் பெருக்கிகளுக்கு (Power Transistors) உகந்த வடிவமைப்பாகத் திகழ்கிறது.