பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

position

1137

POSIX


பொருள்படும் Profiles For Open Systems Internet Working Technology என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அமெரிக்க அரசின் பிணையக் கருவிகளுக்கான கட்டாயமற்ற தர வரையறைகள். டீசிபி/ஐபி நெறி முறையை முற்றிலும் போஸிட் ஏற்கிறது. இது காஸிப்பு (GOSIP) க்கு அடுத்து வந்ததாகும்.

position : நிலை.

positional notation : இடைநிலைக் குறிமானம்;இடம் சார்ந்த குறியீடு; இடமதிப்புக் குறியீடு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தி ஒர் எண்ணளவைக் குறிப்பிடும் முறை. இதில் வலமிருந்து இடமாக அடுத்தடுத்து வரும் எண்கள் அடிமூலத்தின் ஏறுமுக முழு எண் விசைப் பெருக்கமாகக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டு : 634 என்ற எண்னின் பதின்ம எண் விசைப் பெருக்கத்தின் (வர்க்கம்) அடி மூலம் 10; இதன் மதிப்பு = 4x 100 + 3x 101 + 6x 102.

position, bit : துண்மி நிலை;பிட் இட நிலை.

position x : x அச்சு ஆயத்தொலை.

position y : y அச்சு ஆயத்தொலை.

positive logic : உடன்பாட்டு தருக்கம் : 'O'துண்மிக்காக குறைந்த மின்னழுத்தத்தையும், '1'துண்மிக்காக அதிக மின் அழுத்தத்தையும் பயன் படுத்தல் Negative Logic என்பதற்கு எதிர்ச்சொல்.

positive true logic : ஆக்கமுறை உண்மைத் தருக்க முறை : இந்தத் தருக்க முறையில் ஒரு குறைந்த அழுத்தம் 'O' இன் ஒரு துண்மி மதிப்பளவைக் குறிக்கிறது;ஒர் உயர்ந்த அழுத்தம், '1' இன் ஒரு துண்மி மதிப்பளவைக் குறிக்கிறது.

Posix : போசிக்ஸ் : யூனிக்ஸுக்கான கையாண்மை இயக்க முறைமை இடைமுகம் எனப்பொருள்படும் Portable Operating System Interface for Unix என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். போசிக்ஸ் தர வரை

யறைப்படி அமைந்த நிரல்களை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினியில் எளிதாக செயல்படுத்த முடியும். போசிக்ஸ், யூனிக்ஸ் முறைமைச் சேவைகள் அடிப்படையில் அமைந்தது. எனினும் வேறு பல இயக்க முறைகளாலும் செயல் படுத்தப்படும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது.