பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

print server

1159

print wheel


போர்டில் பதியும்.ஆப்பிள் கணினிகளில் ஒத்தியல்பு கருதி இவ்விசை வைக்கப்பட்டுள்ளது.

print server:அச்சு வழங்கன்:ஒரு பிணையத்தில் அச்கப்பொறிகளை மேலாண்மை செய்வதற்கென தனியாக ஒதுக்கப்படும் ஒரு பணி நிலையக் கணினி.பிணையத்திலுள்ள எந்தவொரு பணிநிலையக் கணினியும் அச்சு வழங்கனாகச் செயல்பட முடியும்.

print setup:அச்சு அமைப்பு முறை;அச்சு அமைவு.

print spooler:அச்சு சுருளி:முன்னணியில் மற்ற பணிகள் நடந்து கொண்டிருக்க பின்னணியில் அச்சிடுதல் நடைபெற அனுமதிக்கும் மென்பொருள்.

print statement:அச்சிடு கட்டளை:பேசிக் மொழியில்,ஒரு தரவுவை திரையில் காட்டுவதற்கான கட்டளை.

print text page:உரைப்பக்கம் அச்சிடு.

print to disk:அச்சிலிருந்து வட்டுக்கு:வழக்கமாக அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும் வெளியீட்டை வட்டை நோக்கி அனுப்புவது.உருவாக்கப்படும் கோப்பானது தேவையான வடிவமைப்பு அல்லது படிவம் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.அதை உருவாக்கிய டி.டீ.பீ. நிரல் தொடர் அல்லது சொல் செயலகத்தின் தேவையின்றியே வேறு ஒரு சமயத் திலோ அல்லது தொலைவிலுள்ள ஒரு அச்சுப்பொறிக்கு அனுப்பியோ அச்சிட்டு கொள்ளலாம்.பொதுவாக முதலில் வட்டுக் கோப்பினை உருவாக்கி,பின்னரே அச்சிடப்படுகிறது.ஆனால் அச்சிலிருந்து வட்டுக்கு என்ற செயல்முறையில் கோப்பினை அச்சிடும் வேலை விலக்கப்படுகிறது.

print to file:கோப்பில் அச்சிடு:அச்சிடுவதற்கென வடிவமைக் கப்பட்ட ஒர் ஆவணத்தை அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்குப் பதிலாக, அப்படியே ஒரு கோப்பில் சேமித்து வைப்பதற்கான கட்டளை.பெரும் பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இத்தகைய வசதி உள்ளது.

print using the following driver:கீழ்க்காணும் இயக்கி மூலம் அச்சிடு.

print wheel:அச்சுச் சக்கரம்;அச்சு சுருளை:ஒரு சக்கர அச்சடிப்பியின் ஒர் அச்சடிப்பு இடநிலையில் எழுத்துகளின்