பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

privacy enhanced mail

1161

Private Communications


வேறெருவரும் பார்வையிடக் கூடாது என்கிற கருத்துரு. தனி மறைவுக்கான உரிமை என்பது பொதுவாக இணையத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. கணினி அமைப்புகளை நிறுவிப் பராமரிப்பவர்கள் தங்கள் அமைப்புகளில் பதிவாகும் எந்தவொரு தரவுவையும் பரிசோதிக்கும் உரிமையினைக் கோருகின்றனர். தனி மறைவினை முழுமையாகப் பெறப் பயனாளர்கள் மறையாக்கம் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

privacy enhanced mail : அந்தரங்க மேம்பாட்டு அஞ்சல்;தனிமறைவு மேம்பாட்டு அஞ்சல் : இணையத்தில் மின்னஞ்சல் செய்திகளின் தனி மறைவுத் தன்மை மற்றும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் மறையாக்க நுட்பங்களை பயன்படுத்துகின்ற மின்னஞ்சல் முறைமைக்கான இணைய தர வரையறை.

private : தனியார்.

private automatic branch : தனியார் தானியங்கு கிளை.

private automatic branch exchange (PABX) : தனியார் தானியக்கக் கிளை இணைப்பகம் : ஒரு வணிக அமைவனத்திற்குள் அல்லது தொழிற் சாலைக்குள் தொலைபேசித் தொடர்பினை ஏற்படுத்தி பொதுத் தொலைபேசி இணைப்பகத்திற்குச் செல்லும், அதிலிருந்துவரும் அழைப்புகளை அனுப்புவதைக் கட்டுப் படுத்துகிற தானியக்க தனியார் தொலைபேசி விசைப் பொறியமைவு.

private channel : தனியார் தடம் : இணையத் தொடர் அரட்டையில் (IRC) ஒரு குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தவர்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தடம். இத்தகைய தனியார் தடப்பெயர்கள் பிற பொதுப்பயனாளர்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு விடுவதுண்டு.

private chat : தனியார் அரட்டை, தனியார் உரையாடல்.

Private Communications Technology : தனிமுறைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் : இணையத்தில் பாதுகாப்பான பொதுப்பயன் வணிகத்

துக்காகவும் சொந்தத் தகவல் தொடர்புகளுக்காகவும் வடிவமைக்கப்பட்ட வரன்முறை. தனி மறைவு, சான்றுறுதி, பரஸ்பர அடையாளங்காட்டல் போன்ற