பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Private Communications

1162

privileged instruction


பண்புக் கூறுகளையும் உள்ளடக்கியது.

private database : தனியார் தரவுத் தளம்.

private folders : தனிமுறை கோப்புறைகள் : ஒரு பகிர்ந்தமைப் பிணையச் சூழலில், ஒரு பயனாளரின் கணினியில் இருக்கும் கோப்புறைகள். பிணையத்தின் பிற பயனாளர்கள் இந்தக் கோப்புறைகளை அணுக முடியாது.

private key : தனித்திறவி;தனிமறைக் குறி : மறைக்குறியீட்டு முறையில் இருதிறவி மறையாக்கத்தில் பயனாளர் பயன்படுத்தும் திறவி. பயனாளர் தன்னுடைய தனித்திறவியை கமுக்கமாய் வைத்துக் கொள்கிறார். தன்னுடைய இலக்க முறைக் ஒப்பங்களை மறையாக்கம் செய்யவும், பெறுகின்ற செய்திகளை மறைவிலக்கம் செய்யவும் பயன்படுத்திக் கொள்கிறார்.

private key encryption : சொந்தச் சாவியினாலான உருமாற்றம்.

private line : தனியார் இணைப்பு;தனியார் தடம் : ஒரு பயனாளருக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள அலை வரிசை அல்லது சுற்று வழி.

privately leased line : தனியார் குத்தகைத் தடம் : தனியொரு வாடிக்கையாளரின் பயன்பாட்டுக்கான செய்தித் தொடர்பு இணைப்பு.

private property : தனிப் பண்புகள்.

privatization : தனியார் மயமாக்கம் : பெரும்பாலும் ஒரு நிர்வாகத்தை, வணிக அமைப்பை கட்டுப்பாட்டிலிருந்து வணிகத் தொழிலகத்துக்கு மாற்றியமைப்பது. கணினித் துறையைப் பொறுத்தமட்டில் இணையத்தின் முதுகெலும்பான பல்வேறு பிணையக் கட்டமைப்புகளை தனியார் துறைக்கு மாற்றுதல். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் 1992 இல் என்எஸ்எஃப் நெட் அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் வணிக அமைப்புகளுக்கு மாற்றித் தரப் பட்டுள்ளது.

privileged instruction : சிறப்புரிமை நிரல் : பயனாளர் எழுதிய வழக்கமான செயல்முறைகளில் பயன்படுத்துவதற்குக் கிடைக்கத்தக்கதாக இராத கணினி நிரல். இதனைச் செயற்பாட்டுப் பொறியமைவின் வாலாயங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.