பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quantity

1196

query by example


இணங்கி நடக்குமாறு செய்வ தும் இதில் அடங்கும்.

quantity : எண் அளவாக்குதல் : எண்ணியல் சாராத பொருள் களுக்கு எண்ணியல் மதிப் பளவுகளைக் குறித்தளித்தல்.

quantities : எண் அளவுகள்; பொருள் அளவுகள்.

quantity : எண்ணளவு : கணித முறையில் அல்லது மறுதலை மெய்ம்மை எண்.

quantize : குவாண்டைஸ் : சோதனைகளுக்காக ஒரு பொருளை விரும்பும் மதிப்பு களில் பிரித்தல்.

quantum : அளவை அலகு : துளியம் : ஒரு பொறியமைவில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவை அலகு.

quartz crystal : பலவண்ணப் படிகம் : படிகக்கல்லை ஒரு குறிப்பிட்ட பருமனுக்குத் துண் டாக்குதல். இதில் மின்சாரம் பாய்ந்தவுடன் இது அதிர்கிறது. நுண்ணிய படிகம் ஒரு அங்குலத்தில் 1/20 முதல் 1/5 வரையுள்ள கணினியின் இதயத் துடிப்பை உருவாக்குகிறது. quasi language : மொழிப் போலி.

QUBE : தரவு பயன்பாடு : உயர் அதிர்வெண் மின்கடத்தி வடத் தொலைக்காட்சியின் ஒரு பகுதி யாக இருக்கிற தரவு பயன்பாடு. இது நேயர்கள் புதிய படங்கள் பார்க்க உதவுவது முதல் மருத் துவர்களுக்கும் வழக்குரைஞர் களுக்கும் தனிவகைத் தொழில் முறைத் தரவுகளை அளிப்பது வரை எல்லா வகை வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இது தரவு பரிமாற்ற வகையைச் சேர்ந்தது.

queries : வினவல்கள்

query : கேட்டறி; வினவுதல்; வினா வினவல் : தரவுகளைக் கேட்டல். தரவுகளை ஒரு பொறியமைவிலிருந்து தரவு களை வேண்டுதல்.

query answer : வினா-விடை

query by example : எடுத்துக் காட்டு வழி கேட்டறிதல்; எடுத்துக் காட்டு வழி வினவுதல் : தேர்ந்தெடுத்த பதிவேடுகளுக் கான தகுதிப்பாடுகளை வரை யறுத்துக் கூறி, ஒரு தரவுத் தளப் பொறியமைவிலிருந்து தரவு களைக் கேட்டறிதல். தரவுகளைக்காண ஒரு நடைமுறையை விவரிப்பதற்குப் பதிலாக இவ்வாறு செய்யப்படுகிறது.