பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ragged left

1206

RALU


அல்லது இருபுறமோ இத்தகு சீர்மை செய்யப்படலாம்.

ragged left : சீர்மையிலா எடப்புறம்;சீரிலா இடப்புறம் : நேர்கோடான வலதுபக்க ஒர விளிம்புடனும், ஒழுங்கற்ற இடப்பக்க ஒர விளிம்பும் கொண்டு அச்சிடப்பட்டுள்ள வாசகம். இதனைச் சரிநேர் வலப்புறம் (flush right) என்றும் கூறுவர். இது இடது வரிச்சரியமை (left justify) என்பதிலிருந்து வேறுபட்டது.

ragged right : சேரிலா வலப்புறம்;வலப்புறப் பிசிறு : அச்சடிக்கப்பட்ட உரைப்பகுதியில் வரிகள் வலப்புறத்தில் நேர்சீராக முடிவுறாமல் முன் பின்னாக முடிவுறும் நிலை. கடிதங்கள் மற்றும் பிற சொல்செயலி ஆவணங்கள் இடப்புறம் ஓரச்சீர்மையுடன் இருக்கும். வலப்புறம் பிசிறுடன் காணப்படும்.

RAID : ரெய்டு : தனித்த வட்டுகளின் மிகைக்கோவை என்று பொருள்படும் Redundant Array of Independent Disks என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தரவு சேமிப்பு வழிமுறைகளுள் ஒன்று. தரவோடு சேர்த்து, பிழை திருத்தத்துக்கான தரவுகளையும் (சமன் பிட், ஹேமிங் குறிமுறை போன்றது) இணைத்து இரண்டு அல்லது மேற்பட்ட நிலை வட்டுகளில் பகிர்ந்து சேமிப்பதன் மூலம் செயல்திறனும், நம்பகத்தன்மையும் கூடுகிறது. கோவை மேலாண்மை மென்பொருள், நிலைவட்டின் கோவையை கவனித்துக் கொள்கிறது. வட்டுக் கட்டுப்படுத்தி, பிழை திருத்தத்தைக் கவனித்துக் கொள்கிறது. ரெய்டு, பெரும் பாலும் பிணைய வழங்கனில் பயன்படுத்தப்படுகிறது. அணுகல் வேகம், நம்பகத்தன்மை, செலவு இவற்றின் அடிப்படையில், ரெய்டு பல தரங்களில் செயல்படுத்தப்படுகிறது.

raised flooring : உயர்தளம்;உயர்த்திய தளம் : கணினி அறைகளில் பயன்படுத்தப்படும் உயர்ந்த மேடைத்தளம். இதனால், இணைப்புக் கம்பி வடங்களை சாதன அலகுகளிடையே நேரடியாக அமைக்கலாம்.

RALU : ராலு : பதிவேடு (register), கணிதம் மற்றும் தருக்கமுறை அலகு (arithmatic and logic unit) என்பதன் தலைபெழுத்துச் சுருக்கம். கணித மற்றும் தருக்கமுறைச் செயற்பாடுகள் நிறைவேற்றப்படும் ஒரு நுண்செயலியில் இது மிக முக்கிய பகுதியாகும்.