பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

RAM

1207

RAM compression


RAM : ஆர்ஏஎம்;ரேம் : நேரணுகு நினைவகம்;குறிப்பிலா அணுகு நினைவுப் பதிப்பகம் : குறிப்பின்றி அணுகும் நினைவகம் (Random Access Memory) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இந்த நினைவகத்தில் தரவுகளையும் அறிவுறுத்தங்களையும் எழுதி பதிவு செய்யலாம்;கணினியின் செயல்முறை நினைவகத்திலிருந்து தரவுகளை வரவழைத்துப் படிக்கலாம்;இதனுள் வெளியிலிருந்து செயல்முறைகளைச் செலுத்தி, பின்னர் நிறைவேற்றலாம்.

RAM cache : ரேம் இடைமாற்றகம் : ரேம் (RAM) நினைவகத்திலிருந்து தரவுவை எடுக்கவும் பதியவும் கணினியால் பயன்படுத்தப்படும் இடைமாற்று நினைவகம் (cache memory). கணினியால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற தரவு கூறுகள், இடைமாற்று நினைவகத்தில் இருத்தி வைக்கப்படுகின்றன. வட்டுப்போன்ற துணை நிலைச் சேமிப்பகத்தில் தரவுவை அணுகுவதைவிட மிக வேகமாக அணுகமுடியும்.

RAM card : ரேம் அட்டை : ரேம் நினைவகச் சிப்புகளும் நினைவக முகவரிகளை குறிவிலக்கம் (decode) செய்வதற்கான இடைமுகத் தருக்கப் பகுதியும் பொருத்தப்பட்ட ஒரு கூடுதல் வசதி மின்சுற்றுப் பலகை.

RAM chip : குறிப்பின்றி அணுகும் நினைவகச் சிப்பு : பல்லாயிரம் நினைவக முகவரிகளைக் கொண்ட ஒர் ஒருங்கிணைந்த சுற்றுவழி.

RAM compression : ரேம் இறுக்கம் : விண்டோஸ் 3. x இயக்கமுறைமையில் பொது நினைவகம் போதாமல் போகின்ற சிக்கலுக்கான தீர்வாக பல்வேறு மென்பொருள் விற்பனையாளர்கள் மேற்கொண்ட ஒரு தொழில்நுட்பம்.

ரேம் நினைவகத்தின் வழக்கமான உள்ளடக்கத்தை இறுக்கிச் சுருக்குவதன் மூலம், மெய்நிகர் நினைவகத்தில் (Virtual Memory-பெரும்பாலும் நிலைவட்டு) எழுதுதல்/படித்தல் தேவை குறைகிறது. எனவே கணினியின் வேகம் அதிகரிக்கும். (ஏனெனில், ரேம் நினைவகத்தைவிட வட்டில் உள்ள மெய்நிகர் நினைவகத்தைக் கையாள்வது மெதுவாக நடைபெறும் செயலாகும்). ரேம் சிப்புகளின் விலை குறைந்ததாலும், நினைவகத்தை மிகவும் திறமையாகக் கையாளும் விண்டோஸ் 95/என்டி வருகையாலும் ரேம் இறுக்கம் என்னும் நுட்பத்திற்குத் தேவையில்லாமல்