பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

random READ

1210

rapid application


(direct access processing) என்பதும் ஒன்றே. இது வரிசை முறைச் செய்முறைப்படுத்துதல் (sequential processing) என்பதிலிருந்து வேறுபட்டது.

random READ : குறிப்பின்றி படித்தல்;குறிப்பிலா படிப்பு : ஒரு நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தில், தொடர்புடைய ஆவண எண்மூலம் ஒர் ஆவணத்தைப் படிப்பதற்கான திறன்.

random record number : குறிப்பிலா ஆவண எண் : ஒரு கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதியின் குறிப்பற்ற ஆவணப் புலத்தினுள் பதிவு செய்யப்படும் எண். பிந்திய கோப்புச் செயற்பாடுகள், இந்த எண்ணை, நடப்புத் தொகுதிக்கு மாற்றி, அதன் நடப்பு ஆவண மதிப்பினையும் மாற்றுகிறது.

random sampling : குறிப்பற்ற மாதிரி : ஒர் அளவாய்வில் அல்லது ஆய்வில் ஒருசார்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக, புள்ளியியல் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒர் உத்தி. எடுத்துக்காட்டாக, ஒரு நாடாளுமன்றத் தேர்தல் முடிவு பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு, இடத்துக்கு இடம், நகருக்கு நகர், நேரத்துக்கு நேரம் மாறுபடக்கூடும். தரவுத் தளத்தில் மறைமுக ஒரு சார்பு, இயன்ற வரை இல்லாதவாறு குறிப்பற்ற மாதிரி பார்த்துக் கொள்கிறது.

random WRITE : குறிப்பின்றி எழுதுதல் : ஒரு நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தில், தொடர்புடைய ஆவண எண் மூலம் ஒர் ஆவணத்தை எழுதுவதற்கான திறன்.

range : அளவெல்லை;வீச்சு : ஒரு தனிமம் மேற்கொள்ளும் மதிப்பளவு களின் வீச்செல்லை.

range check : அளவெல்லை சரிபார்ப்பு;வீச்சுச் சோதனை : ஒரு எண்மானத் தனிமம், ஒரு குறிப்பிட்ட அளவெல்லைக்குள் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும்முறை. எடுத்துக்காட்டு : மாதங்கள், 01-12 என்ற அளவெல்லைக்குள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தல்.

range of applicability : பயன்பாட்டுத் தன்மை வீச்சு.

rank : படிவரிசை;படிநிலை : 1. முக்கியத்துவத்திற்கேற்ப ஏறு வரிசையில் அல்லது இறங்கு வரிசையில் அமைத்தல். 2. ஒரு குழுமத்தில் இடநிலையை அளவிடுதல். வரிசை அல்லது வகைப்பாட்டின் வரிசைமுறை.

rapid application development (RAD) tools : அதிவிரைவுப் பயன்பாடு உருவாக்க கருவிகள்.