பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

real address

1218

real mode


real address : மெய் முகவரி : நினைவகத்தின் ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்தை குறிக்கும் முற்று (Absolute) முகவரி பொறி முகவரி (Machine Address) என்றும் கூறலாம்.

Real Audio : ரியல் ஆடியோ : இணையத்தில் பெருமளவு பயன் படுத்தப்படும் மென்பொருள். இறுக்கிச் சுருக்கி வலை வழங்கன்களில் (Web Server) சேமித்து வைக்கப்பட்டுள்ள இசைப்பாடல் கோப்புகளை இணைய உலாவிமூலம் கொணர்ந்து, பயனாளரின் கணினியில் அதனை விரித்துப் பாட வைக்கும். இணையத்தில் நிகழ்நேர (Live) பாடல்களையும் கேட்கலாம். குறிப்பு : இப்போது கேட்பொலி, ஒளிக்காட்சி இரண்டுக்கும் சேர்த்து ரியல் பிளேயர் என்ற பெயரில் இணையத்தில் கிடைக்கிறது. இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

real constant : மெய்ம்மை மாறிலி;மெய் மாறிலி : ஒரு பதின்மப் புள்ளியை உடைய எண். எடுத்துக்காட்டு : 26. 4; 349. 0. இது'மிதவைப்புள்ளி மாறிலி' (floating point constant) என்று அழைக்கப்படுகிறது.

reallfloat : புள்ளி எண்;மெய்யெண்.

realloca : ரீ-அலாக்;மறு ஒதுக்கீடு : சி-மொழியிலுள்ள ஒர் உள்ளிணைக்கப்பட்ட செயல் கூறு. எம். அலாக் (malloc) என்னும் செயல்கூறு மூலம் ஏற்கெனவே குவியல் நினைவகத்தில் (heap memory) ஒரு குறிப்பிட்ட சுட்டுக்கு (pointer) ஒதுக்கப்பட்ட நினைவகப் பகுதியை அதிக மாக்குவதற்கான செயல்கூறு.

real mode : மெய்ப்பாங்கு : இன்டெல் 80x86 குடும்ப நுண் செயலிகளில் செயல்படுத்தப்படும் இயக்கப்பாங்கு. மெய்ப்பாங்கு முறையில் செயலி யானது ஒரு நேரத்தில் ஒரு நிரலை மட்டுமே இயக்க முடியும். 1 எம்பி நினைவகத்துக்கு மேல் அணுக முடியாது. ஆனால் முதன்மை நினைவகத்தையும், உள்ளிட்டு/வெளியீட்டு சாதனங்களையும் தாராளமாக அணுக முடியும். 8086 செயலியில் மெய்ப்பாங்கு மட்டுமே உண்டு. எம்எஸ் டாஸ் இயக்கமுறைமை மெய்ப்பாங்கில் மட்டுமே செயல்படும். இதற்கு மாறாக 80286 மற்றும் பிறகு வந்த நுண் செயலிகளில் பாதுகாக்கப்பட்ட பாங்கு (Protected Mode) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யமுடியும். விண்டோஸ் இயககமுறைமை போன்ற பல்