பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Red Book

1227

redlining


கொண்டு வந்து இத்தொட்டியில் போட்டு விடலாம். இங்குள்ள கோப்புகள் உண்மையில் வட்டிலிருந்து நீக்கப்படுவதில்லை. நீக்கப்பட்ட கோப்பு மீண்டும் வேண்டுமெனில் இக்கோப்புறையிலிருந்து மீட்டுக் கொள்ளலாம். மீட்புத் தொட்டியிலுள்ள கோப்புகளை ஒட்டு மொத்தமாக நீக்கவும், ஒரு குறிப்பிட்ட கோப்பினை நிரந்தரமாக நீக்கிவிடவும் வழிமுறைகள் உள்ளன.

Red Book : சிவப்புப் புத்தகம்;செம்புத்தகம்;செந்நூல் : அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகமை உருவாக்கிய தர வரையறை ஆவணங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. நம்பத்தகுந்த கணினி அமைப்புகளின் மதிப்பாய்வு அடிப்படையின் நம்பத்தகுந்த பிணையப் பொருள் விளக்கம் என்பது இப்புத்தகத்தின் தலைப்பு. (Trusted Network Interpretation of the Trusted Computer System Evaluation Creteria). நம்பத்தகுந்த பிணைய பொருள்விளக்கம் என்கிற ஆவணமும் உண்டு. கணினி அமைப்புகளை A1 முதல் D வரை தரப்படுத்துவதற்கான வரையறுப்புகள் இப்புத்தகத்தில் உள்ளன. A1 என்பது மிகவும் பாதுகாப்பானது. D என்பது பாதுகாப்பற்றது. மிகவும் உயிர் நாடியான தரவுவைப் பாதுகாப்பதில் ஒரு கணினிப் பிணையத்துக்கிருக்கும் திறனை இத்தரவரிசை குறிக்கிறது.

red- green-blue monitor : சிவப்பு-பச்சை-நீலத் திரையகம் : மிக உயர்ந்த வண்ணச் செறிவுடைய காட்சி அலகு.

redirection : திசை மாற்றம்;நெறிமாற்றம் : தரவுகளை அதன் இயல்பான இலக்கிலிருந்து இன்னொரு இலக்குக்கு நெறிமாற்றி அனுப்புதல். எடுத்துக் காட்டாக, அச்சடிப்பிக்குப் பதிலாக ஒரு வட்டுக்கோப்புக்கு அல்லது ஒரு உள்முக வட்டிலிருந்து ஒரு பணிய வட்டுக்கு மாற்றுதல்.

redirector : திசைமாற்றி, நெறி மாற்றி : ஒர் உள்முகப்பகுதி இணையத்தில் (LAN) தரவுகளைக் கேட்கும் பணி நிலையத்தின் வேண்டுகோளை ஒரு பணியத்துக்கு (server) அனுப்பி வைக்கிற மென்பொருள்.

redlining : செங்கோடிடல்;சிவப்புக் கோடிடல்;மாற்றம் பதிகை : சொல் செயலி மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. ஒர் ஆவணத்தை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன்