பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

B

122

backbone


B

b : பி : 'பைட்' (byte) அல்லது 'பாட்' (baud) என்பதன் சுருக்கப் பெயர். இருப்பகத்தைக் குறிப்பிடும் இடங்களில் 'பைட் (எண்மி) என்றும் தகவல் தொடர்புகளில் குறிப்பிடும்போது 'பாட் (செய்தி வேகம்) என்றும் உணர்த்தும் கேபி (KB) - 1000 பைட்டுகள் அல்லது பாட் (தொழில்நுட்ப அடிப்படையின்படி 1கே (1K) என்பது 1024 பைட்டுகளைக் குறிக்கும்).

babbage, charles : பாபேஜ், சார்லஸ் : (1792 - 1871) ஆங்கிலேய கணிதவியலாளர்; கண்டு பிடிப்பாளர். 20 பதின்மப் புள்ளிகள் வரை மடக்கை எண் (லாகர்தம்) மூலம் கணக்கிடக் கூடிய ஒரு வேறுபாட்டு எந்திரத்தை வடிவமைத்தவர். இலக்கமுறை கணிப்பொறிக்கு முன்னோடியாக விளங்கும் 'பகுப்பு' எந்திரத்தையும் உருவாக்கியவர். பாபேஜ் காலத்தில் அவரது எந்திரங்களை வெற்றிகரமாக உருவாக்குவதற்கு வேண்டிய பொறியியல் தொழில் நுட்பங்கள் முன்னேறியவையாக இல்லை.

babble : பிறழவு : ஒரு அமைப் பின் பெருமளவு வழித்தடங்களில் ஏற்படும் குறுக்கீட்டுப் பேச்சு.

bachman diagram : பக்மன் வ்ரைபடம்.

back : முந்தைய

backbone : முதுகெலும்பு : அடியாதாரம் : 1. சிறு சிறு பிணையங்களை ஒருங்கிணைத்து அவற்றுக்கிடையே தகவல் போக்குவரத்தை ஏற்படுத் தும் பெரும் பிணையம். இணையத்தில் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள இத்தகைய முது கெலும்புப் பிணையங்கள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் ஆறு முது கெலும்புப் பிணையங்கள் உள்ளன (எ. டு : sprint, MCI) ஆயிரக்கணக்கான மைல்கள் பரப்பிலுள்ள பகுதிகள் துண்அலை (microwave) தடங்கள், நிலத்தடி, கடலடிக் கேபிள்கள் மற்றும் செயற்கைக் கோள்களால் இணைக்கப்படுகின்றன. 2. இணையத் தகவல் தொடர்பில் பெருமளவு தகவல் பொட்டலப் பரிமாற்றங்களைச் செயல் படுத்துகின்ற சிறிய பகுதிப் பிணையங்கள். 3. ஒரு பிணையத்தில் தகவல் தொடர்புப் போக்குவரத்துக்கு ஆதாரமாக விளங்கும் இணைப்புக் கம்பிகள். ஒரு குறும்பரப்புப் பிணை