பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

relative pointing device

1239

relative URL


அமையும் கோப்பகப் பாதை. பயனாளர், ஒரு கோப்பு தொடர்பான கட்டளையைக் கொடுக்கும்போது, முழுப் பாதையும் கொடுக்கவில்லை எனில், நடப்புக் கோப்பகம் சார்புப் பாதையாக எடுத்துக் கொள்ளப்படும். C : \WORK>DEL C : \TC\PRG\ TEST. C என்ற கட்டளையில் TEST. C என்னும் கோப்பு இருக்கும் முழுப்பாதையும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், C : \WORK> DEL TEST. C என்னும் கோப்பு WORK கோப்பகத்தில் உள்ளது எனப்பொருள்படும். C : \WORK> DEL PRG\TEST. C என்ற கட்டளை அமைத்தால், WORK-லிலுள்ள PRG என்னும் உள்கோப்பகத்திலுள்ள TEST. C என்று பொருள்படும். C : \WORK> DEL TC\PRG\ TEST. C என்ற கட்டளையும் C : \WORK\TC\PRG\ TEST. C என்ற கோப்பினையே குறிக்கும்.

relative pointing device : ஒப்பு நிலைசுட்டுச்சாதனம் : சுட்டி (Mouse), கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து அமைவதில்லை. சாதனத்தின் நகர்வுகளைப் பொறுத்தே அமைகிறது. எடுத்துக்காட்டாக, சுட்டியைத் திண்டின்மீது ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்தில் தூக்கி வைத்தோமானால் திரையில் காட்டி நகர்வதில்லை. ஆனால், திண்டின்மீது உராயுமாறு சுட்டியைச் சிறிதளவு நகர்த்தினால் போதும் திரையிலுள்ள காட்டியும் நகரும். இவ்வகைச் சுட்டுச் சாதனங்கள், முற்றுநிலை (Absolute) சுட்டுச் சாதனங்களிலிருந்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக வரைகலைப் பலகை (Graphics Tablets) யில் குறிப்பிட்ட பரப்புக்குள் சுட்டுச்சாதனம் எந்த இடத்தில் இருக்கிறதோ அதற்கேற்ப திரையிலுள்ள காட்டியின் இருப்பிடமும் அமைகிறது.

relative URL : யுஆர்எல் : சீரான வள இடங்காட்டி (Uniform Resource Locator) என்பது சுருக்கமாக யுஆர்எல் என வழங்கப்படுகிறது. களப்பெயர், கோப்பக, உள்-கோப்பகப் பெயர்கள் எதுவுமின்றி ஆவணத்தின் பெயரையும், வகைப்பெயரையும் மட்டுமே குறிப்பிடும் முறை. சிலவேளைகளில்

கோப்பகப் பாதையில் ஒரு பகுதி கொடுக்கப்படலாம். நடப்புக்