பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

relay

1240

reload


கோப்பின் பாதையிலிருந்து கொடுக்கப்பட்ட கோப்பின் பாதை சார்புப் பாதையாக எடுத்துக் கொள்ளப்படும். www. msn. com\asp\net. html என்ற கோப்பினைப் பார்வையிடும் போது, www. msn. com\asp\csharp \ref. html எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக csharp\ref. html என்று மட்டும் குறிப்பிடுவது சார்பு யுஆர்எல் எனப்படும்.

relay : அஞ்சல்.

release1 : வெளியீடு : 1. மென்பொருள்களின் பதிப்பு தொடர்பான சொல். மென்பொருள்கள் பதிப்புஎண் இடப்பட்டு வெளி யிடப்படுகின்றன. விண்ஸிப் 7. 0 (Version No) 'விண்ஸிப் 8. 0 என்றெல்லாம் குறிப்பிடுவர். மிக அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட பதிப்போடு தொடர்புடைய வெளியீட்டை வரிசையெண்ணிட்டு அழைப்பதுண்டு. Open Server System V Release 5. 0, Lotus 1-2-3 Release 2. 2இவ்வாறு சில நிறுவனங்கள் மென்பொருளின் பெயரோடு சேர்த்தே வெளியீட்டு எண்ணையும் குறிப்பிடுவதுண்டு. 2. பொது வினியோகத்தில் கிடைக்கின்ற ஒரு மென்பொருள் தயாரிப்பின் பதிப்பு எண்.

release2 : விடுவி;வெளியிடு;வெளியீடு : 1. நினைவகத்தின் ஒரு பகுதியை அல்லது ஒரு புறச்சாதனத்தை அல்லது பிறவளம் ஒன்றினை கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து இயக்க முறைமையின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தல். 2. ஒரு வன்பொருள்/மென்பொருள் தயாரிப்பை விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்தல்.

release version : வெளியீட்டுப் பதிப்பு : விலைக்கு வாங்குவதற்குத் தற்சமயம் கிடைக்கக்கூடிய ஒரு செயல்முறையின் பதிப்பு.

relevancy ranking : தேவைக்கேற்ப தரப்படுத்தம்.

reliability : நம்பகம்;நம்பகத்தன்மை.செயல்முறைப் பொறியமைவு அல்லது தனிப்பட்ட வன்பொருள் சாதனம் எவ்விதப் பழுதுமின்றி தடையின்றி செயற்படுவதற்கான திறம்பாட்டின் அளவீடு.

reload : மறுஏற்றம் : 1. ஒரு நிரலின் செயல்பாட்டில் எதிர்பாராத இடையூறு நேரும்போதோ, கணினிச் செயல்பாடு திடீரென நிலைகுலையும் போதோ, சேமிப்புச் சாதனத்திலிருந்து அந்நிரலை நினைவகத்தில் மீண்டும் ஏற்றுதல். 2. இணைய உலாவியில் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வலைப்பக்கத்தின்