பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

background reflectance

125

back panel


கணினி அமைப்புகளில் உயர் முன்னுரிமை உள்ள நிரல்களைச் செயல்படுத்தத் தேவையில்லாதபோது செயல்படுத்தப் படும் நிரல். முன்புல நிரலுக்கு மாறானது.

background reflectance : பின்னணி பிரதிபலிப்பு : ஒரு எழுத்தைச் சுற்றி ஏற்படும் பிரதி பலிப்பை அளக்கும் ஒ. சி. ஆர் (OCR-Optical CharacterRecognition).

background tasks : பின்புலப் பணிகள்.

backing storage : தாங்கும் இருப்பகம் : பின்னர் பயன் படுத்துவதற்காக வட்டுகள் அல்லது நாடாக்களில் வைக்கப் பட்டிருக்கும் துணை நிலை நினைவகம்.

backing store : பின்தாங்கும் இருப்பு : கணினியின் முதன்மை நினைவகத்திற்கு பின்பலமாக இருந்து தாங்குகின்ற நினைவகம். துணை இருப்பகம் என்றும் அழைக்கப்படுகிறது.

backing-up : பின் ஆதரவு : மூலம் சேதமாகவோ அல்லது தொலைந்து போகவோ செய்யுமானாலும் உள்ளடக்கங்களை இழக்காமல் இருப்பதற்காக பின் ஆதரவு படிகளை ஏற்படுத்திக் கொள்ளல்.

backlash : பின் விளைவு : எந்திரமுறை செயல்பாட்டின் போது, தாங்குவதன் விளைவாக இரண்டு பல் சக்கரங்களைப் போன்ற சேர்ந்தியங்கும் பகுதிகளின் செயல்.

backline : பின் பகுதி : ஒரு அமைப்பின் அட்டைகளில் மின் சுற்றுகள் மற்றும் எந்திரப் பகுதிகள் இணைக்கப்படுவதுண்டு. இதில் முதன்மை மின்சுற்று அட்டைகள் பொருத்தப்படும். தாய்ப் பலகை என்றும் முறைமைப் பலகை என்றும் அழைப்பர்.

backlit : பின்னொளி : திரையின் பின்பக்கத்திலிருந்து ஒளி வருகின்ற எல்சிடி திரை. இதனால் பின்னணி பிரகாச மாகவும் எழுத்துகள் தெளிவாகவும் இருக்கும்.

back-lit display : பின்-ஒளி திரைக் காட்சி : திரைக்குப் பின்னால் ஒளிபடுமாறு அமைக்கப்பட்ட எல்சிடி திரைக் காட்சி. உருவங்கள் கூர்தெளிவாகவும், எழுத்துகள் நன்கு படிக்கும் படியும் இருக்கும். குறிப்பாக, சுற்றுப்புறம் மிகவும் ஒளியுடன் விளங்கும்போது இத்தகைய ஏற்பாடு பலன் தரும்.

back panel ; பின் பலகம் : கணினி பெட்டியில் வெளிப்புறச் சாதனங்களை கணினியுடன்