பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

routing receipient

1270

RS-232C


routing receipient : திசைவிப்பு பெறுநர்.

row : வரிசை : 1. ஒரு வரிசையின் ஒரு வரியின் கிடைமட்ட எழுத்துகள். 2. துளையிட்ட அட்டையில் துளையிட்ட நிலையிடங்களில் கிடைமட்ட வரிகளில் ஒன்று. 3. ஒரு மின்னணுவியல் விரிதாளில் செங்குத்துப் பகுதிகள். நெடுவரிசைகளும் (columns) கிடைவரிசைகளும் சேர்ந்து அதில் விரிதாள் அச்சு வார்ப்புருவாக அமைகின்றன.

row, binary : இருமக் கிடக்கை.

row, column : நெடுக்கை கிடக்கை.

row, number : கிடக்கை எண்;வரி எண்.

row, pitch : புரி அடர்த்தி வரிசை.

row/record : கிடக்கை/ஏடு.

row source : கிடக்கை மூலம்.

row source type : கிடக்கை மூல இனம்.

royalty : புனைவுரிமைத் தொகை.

RPG : ஆர்பிஜி : 'அறிக்கைச் செயல்முறை உருவாக்கி என்று பொருள்படும்'Report Programme Generator" என்பதன் தலைப்பெழுத்துச் சொல். இது, வணிகம் சார்ந்த, பெரிதும் புகழ் பெற்ற செயல்முறைப்படுத்தும் மொழி. உயர்ந்த கட்டமைப்பு உடையது;எளிதில் கற்றுக் கொள்ளக்கூடியது. பல வணிகச் செயல்முறைப்படுத்தவும், அறிக்கைகள் தயாரிக்கவும் பயன் படுகிறது.

RPROM : ஆர்பிஆர்ஓஎம் : 'மறு செயல்முறை வகுத்திடத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம்' என்று பொருள்படும்'Reprogrammable Read Only Memory' என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

'RSA encryption : ஆர்எஸ்ஏ மறையாக்கம் : '1978இல் திருவாளர்கள் ரொனால்டு ரைவெஸ்ட், ஆதிசமீர், லியோனார்டு ஆடில்மேன் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கிய மறையாக்க முறை. மூவர் பெயர்களின் (Rivest Shamir Adleman) முதலெழுத்துகள் இணைந்து ஆர்எஸ்ஏ ஆயிற்று. இந்த மறையாக்க முறையை அடிப்படையாகக் கொண்டு பீஜிபீ (PGP-Pretty Good Privacy) மறையாக்க நிரல் உருவாக்கப் பட்டது.

RS-232C : ஆர்எஸ்-232சி : அச்சடிப்பிகள், கணினிகள் போன்ற முனையச் சாதனங்களுக்கும், அதிர்விணக்கி (Modulator), அதிர் விணக்கம் நீக்கி (Demodulator)