பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

saturated mode

1280

s-100 bus



அதிகமாக ஈர்க்கும்படி செய்யமுடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக ஈர்க்கும்படி செய்தல். ஒரு வட்டில் அனைத்துத் தடங்களும் நிரப்பப்பட்டிருந் தால் அது பூரிதமாக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.

saturated mode : பூரிதப் பாங்கு; முற்றுநிலைப் பாங்கு : ஒரு நிலைமாற்றுச் சாதனம் (switching device) அல்லது ஒரு பெருக்கியின் ஊடே பாய்கின்ற மின்னோட்டம் உச்ச அளவை எட்டிய நிலை. இந்த நிலையில் உள்ளிட்டுக் கட்டுப்பாட்டு சமிக்கையின் அளவை எவ்வளவு அதிகரித்தாலும் வெளியீட்டு மின்னோட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.

saturation : பூரிதம்; முற்றுநிலை; முழுநிறைவு : 1. ஒரு நிலை மாற்றுச் சாதனம் அல்லது பெருக்கியின் முழு கடத்துநிலை. இந்த முற்றுநிலையில், இவற்றின் ஊடே உச்சஅளவு மின்னோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும். இருதுருவ (bipolar) மற்றும் புல-விளைவு (fieldeffect) மின்மப் பெருக்கிகளைக் கொண்ட மின்சுற்றுகள் குறித்தே பெரும்பாலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. 2. வண்ண வரைகலையிலும், அச்சுத்துறையிலும் ஒரு குறிப்பிட்ட நிறக்கலவையில் ஒரு குறிப்பிட்ட நிறத்தின் அளவு முற்றுநிலை பெற்றதாகக் குறிப்பிடுவர்.

save : சேமி; வேறிடச் சேமிப்பு : கணினியின் உள்முக நினைவகத்தில் அல்லாமல், ஒரு நாடா, வட்டு போன்ற வேறிடங்களில், மீண்டும் பயன்படுத்தும் வகையில் தகவல்களைச் சேமித்து வைத்தல்.

Save as HTML : ஹெச்டீஎம்எல் ஆக சேமி.

Save as Type : வகையில் சேமி.

save record : ஏட்டைச் சேமி.

save results : விடைகளைச் சேமி.

Save/Save As : சேமி/எனச் சேமி

save workspace : பணிவெளியைச் சேமி.

saving : சேமித்தல்.

. sb : . எஸ்பி : ஒர் இணைய தள முகவரி சாலமன் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

s-100 bus : எஸ்-100-பாட்டை : இன்டெல் 8080, ஸிலாக் இஸட்80 நுண்செயலிகளை அடிப்படையாகக் கொண்ட கணினிகளின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட 100 (பின்கள்)