பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scalar data type

1282

scale



ஒற்றை மதிப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு காரணி, ஒரு குணகம் அல்லது ஒரு மாறிலியை இது குறிக்கும். AB என்கிற ஒரு நெறியம், தொடக்கப்புள்ளி இறுதிப் புள்ளிக் கிடையே தொலைவு மற்றும் திசைப்போக்கு ஆகிய இரண்டு விவரங்களைக் கொண்டுள்ளது. ஆனால் AB என்று மட்டுமே குறித்தால், தொலைவை மட்டுமே குறிக்கும் ஒர் அளவீடு ஆகும்.

scalar data type : ஒற்றைமதிப்பு தரவு இனம் : இதைவிடப் பெரியது, அதைவிடச் சிறியது என்று ஒப்பிட்டுச் சொல்லத்தக்க தொடர் மதிப்புகளைக் கொண்டிருக்கும் தரவு இனம். முழு எண் (Integer), எழுத்து (Character), பயனாளர் வரையறுக்கும் எண்ணல் வகை (user defined enumerated type), பூலியன் ஆகிய தரவு இனங்களையும் இந்த வகையில் அடக்கலாம். மிதவைப்புள்ளி எண்களை இந்த வகையில் சேர்ப்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அவற்றையும் வரிசைப்படுத்தமுடியும், ஒப்பிட முடியும் என்றபோதிலும் தோராயமாக்கல், இனமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைக் கருத்தில் கொண்டு புறக்கணிப்பாரும் உளர்.

scalar processor : ஏறுமுகச் செய்முறைப்படுத்தி : ஒரே சமயத்தில் ஒர் இலக்கத்தில் கணிதக் கணிப்புகளைச் செய்யக்கூடிய கணினி. இது செயலகச்செய்முறைப்படுத்தியினின்றும் மாறுபட்டது.

scalar value : ஏறுமுக மதிப்பளவு : ஒரு செயல்முறைப்படுத்தும் மொழியில் ஏறுமுக மதிப்பளவு என அறிவிக்கப்பட்ட பகுபடா எண். இது ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மதிப்பளவினைக் கொண்டிருக்கும். இது நெறியம் (vector) என்பதிலிருந்து வேறுபட்டது.

scalar variable : ஏறுமுக மாறிலி : செயல்முறைப்படுத்துவதில் ஒரேயொரு மதிப்பளவையுடைய ஒரு மாறியல் மதிப்புரு.

scale : அளவுகோல் : 1. இருக்கக்கூடிய சேமிப்பு அமைவிடத்திற்குள் பொருந்தும் வகையில் ஒர் எண்ணளவின் அளவினைச் சரியமைவு செய்தல். 2. ஒரு வரைகலைக் கோப்பினை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பொருந்தும்படி செய்வதற்காக அதன் வடிவளவை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றுதல். 3. வடிவளவு வரம்புகளுக்குள் பொருந்தும் வகையில் வரைகலைத் தரவுகளின்