பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

back volume

128

Baldwin, Frank Stephen


விதிகளின்படி திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை வடிவம். மூன்றாவது இயல்பு வடிவத்துக்கு அடுத்து இடம் பெறுவது.

back volume : முன்தொகுதி.

backward - chaining : பின்னோக்கி சங்கிலியிடல் : தேவைப்படும் இலக்கிலிருந்து ஏற்கெனவே தெரிந்த உண்மைகளை நோக்கிச் செல்லும் இலக்கு நோக்கிய காரண முறை.

backward compatible : பின்னோக்கிய ஒத்தியல்பு : கீழ் நோக்கிய ஒத்தியல்பு போன்றது.

backward read : பின்புறமாகப் படி : சில காந்த நாடா அமைப்புகளில் உள்ள வசதி. இதில் காந்த நாடா அலகுகள் தலைகீழாக நகர்ந்து கொண்டே, கணினி பின் இருப்பகத்திற்குள் தரவுகளை மாற்றித் தரும்.

backward reasoning : பின்னோக்குக் காரணியம்.

bad block : பழுதுத் தொகுதி : நினைவகத்தில் பழுதான பகுதி. கணினியை இயக்கி வைக்கும் போது, நினைவகக் கட்டுப்பாட்டு பொறி கயபரிசோதனை செய்து கொள்கையில் பழுதான தொகுதியை அடையாளங் காண்கிறது.

badge reader : பட்டை படிப்பி : கடன் அட்டைகள் அல்லது சிறப்புக் குறியீட்டுப் பட்டைகளைப் படிக்கக் கூடிய முனையம். bad sector : பழுதுப் பகுதி : வட்டில் உள்ள குறை காரணமாக சரியாகப் படிக்கவோ அல்லது எழுதவோ முடியாத வட்டின் ஒரு பகுதி. bad track : பழுதுத் தடம் : நிலை வட்டில் அல்லது நெகிழ்வட்டில், பழுதான பிரிவைக் கொண்டுள்ள ஒரு தடம். இவ்வாறு பழுதெனக் குறிக்கப்பட்ட தடத்தை இயக்க முறைமை புறக்கணித்துச் செல்லும்.

. bak : பாக் : பெரும்பாலான உரைத்தொகுப்பான் அல்லது சொல் செயலிகளில் ஒரு கோப்பில் திருத்தம் செய்து சேமிக்கும்போது அக்கோப்பின் முந்தைய வடிவம் இந்த வகைப் பெயருடன் (Extension) சேமிக்கப்படுவதுண்டு.

balanced line : சமச்சீர் இணைப்புத் தடம் : முறுக்கிணைக் கம்பிகள் போன்ற தகவலனுப்பு தடம். அதிலுள்ள இரு மின் கடத்திகளும், சம அளவுள்ள எதிரெதிர் துருவமும்/திசையும் கொண்ட மின் அழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் கொண்டிருப்பின் அது சமச்சீர் இணைப்புத் தடம் எனப்படுகிறது.

Baidwin, Frank Stephen பால்ட்வின், ஃப்ராங்க் ஸ்டீஃபன் :