பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sector method

1299

secure transaction


பிறகு, இரண்டாவது வட்டக் கூறினைப் படிக்கும் அளவுக்கு வட்டுக்கட்டுப்படுத்தி விரைவாக இயங்கவேண்டும். இல்லையெனில், இரண்டாம் வட்டக் கூறின் தொடக்கம், எழுது/படிப்பு முனையைக் கடந்து சென்றுவிடும்; மீண்டும் அது முனையின்கீழ் வருவதற்கு மறுபடியும் ஒரு சுற்று சுற்றிவர வேண்டும். அதுபோதிய வேகத்தில் இயங்காவிட்டால், ஒரு 2 : 1 அல்லது 3 : 1 இடை இணைப்பு, ஒரே சுழற்சியில் வட்டக்கூறுகள் அனைத்தையும் படிப்பதற்கு அதற்குக் கால அவகாசம் கொடுக்கிறது.

sector method : வட்டக் கூறு முறை;பிரிவு முறை : ஒரு வட்டின் மேற்பரப்பினைக் குவிய வட்டக் கூறுகளாகப் பகுக்கக் கூடிய, நெகிழ்வட்டுகளுடன் பயன்படுத்தப்படும் வட்டு முக வரியிடும் முறை.

secure channel : பாதுகாப்பான தடம் : அனுமதியற்ற அணுகல் மற்றும் செயல்பாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு செய்தித் தொடர்பு இணைப்பு. பொதுப் பிணையத்திலிருந்து விலகித் தனித்திருத்தல். மறையாக்கம் அல்லது பிற கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதால் இப்பாதுகாப்பு அமையலாம்.

Secure Electronics Transactions Protocol : பாதுகாக்கப்பட்ட மின் னணுப் பரிமாற்ற நெறிமுறை : இணையத்தில் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்துக்கான நெறிமுறை. ஜி. டீஇ, ஐபிஎம், மாஸ்டர் கார்டு, மைக்ரோ சாஃப்ட், நெட்ஸ்கேப், எஸ்ஏஐசி, டெரிசா சிஸ்டம்ஸ், வெரிசைன், விசா கார்டு ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்த நெறிமுறை உருவாக்கப்பட்டது.

Secured Electronic Transaction (SET) : பாதுகாப்பான மின்னணு பரிமாற்ற முறை.

secure kernel : காப்புக்கரு மூலம்; காப்புக் கரு : ஒரு பொறியமைவுச் செயல்முறையின் பாதுகாக்கப்பட்ட கூறு.

secure site : பாதுகாப்பான தளம் : பற்று அட்டை எண்கள் மற்றும் பிற சொந்தத் தகவல்களை அனு மதியற்ற நபர்கள் அத்துமீறி அணுகாவண்ணம் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்யும் திறனுள்ள வலைத் தளத்தைக் குறிக்கிறது.

secure transaction technology : பாதுகாப்பான பரிமாற்றத் தொழில் நுட்பம் : சொந்தத் தகவல்களடங்கிய படிவங்களைச் சமர்ப்பித்தல், பற்று அட்டை மூலம் பொருள் வாங்குதல் போன்ற