பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shade of grey

1321

Shannon, Claude E.


shade of grey : சாம்பல் சாயல்.

shading symbols : நிழல் குறியீடுகள் : தொகுதி வரைகலை எழுத்துகள். சில கணினி வரைகலைகளில் உள்ளமைந்த எழுத்துத் தொகுதிகளின் ஒரு பகுதி. இவை, வேறுபட்ட புள்ளிச் செறிவுகளை அளித்து மாறுபட்ட நிழற் சாயல்களின் தோற்றத்தைக் கொடுக்கிறது.

shadow : நிழல்.

shadow mask : நிழல்முகமூடி : ஒரு வண்ண CRT-இன் பார்வைக் கண்ணாடியின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கிற துளைகள் கொண்ட திரை. இந்தத் துளைகளின் வழியாக எலெக்ட்ரான் கற்றை பாஸ்ஃபோர் புள்ளிகளை நோக்கிப் பாய்ச்சப்படுகிறது.

shadow memory : நிழல் நினைவகம் : சில 80x86 செயலிக் கணினிகளில், கணினியின் இயக்கத்தைத் தொடங்கும்போது முறைமையின் ரோம் பயாஸ் நிரல்கூறுகளை, ரேம் நினைவகத்தில் பயன்படுத்தப் படாத பகுதியில் பதிவுசெய்ய, பயாஸ் நடைமுறைப்படுத்தும் ஒரு நுட்பம். இவ்வாறு நகலெடுத்து வைப்பதால் கணினியின் செயல்திறன் கூடுகிறது. பயாஸ் நிரல் கூறுகளை பயாஸில் சென்று தேடாமல், நினைவகத்திலுள்ள நிழல் நகல்களில் எடுத்துக் கொள்ளும். நிழல் ரேம், நிழல் ரோம் என்றும் கூறுவர்.

shadow printer : நிழல் அச்சுப் பொறி.

shadow printing : நிழல் அச்சடிப்பு : நிழல் அச்சு முறை : அச்சுத் தலைப்பினை அதன் முந்திய நிலையான 1/120 அங்குலத்திற்குள் அடக்கி பரும எழுத்தாக அச்சடித்தல். முதல் அச்சடிப்புக்கும் மேல் அச்சடிப்புக் குமிடையில் சிறிதளவு பிழையான பதிவு மூலம் பரும எழுத்து உண்டாகிறது. இது பன்முக அச்சடிப்பிலிருந்து வேறுபட்டது.

shadow RAM : நிழல் ரேம் : ராம் பொதுவாக ROM சிப்புகளினால் கையாளப் படுகிற செயற்பணிகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகிற ஒரு RAM-இன் பகுதி. ROM-ஐவிட RAM விரைவாகச் செயற்படுவதால், செய்முறைப்படுத்தும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கட்டுப் பாட்டையும் மேம்படுத்துகிறது.

Shannon, Claude E. : ஷான்னோன், கிளாட் இ : பூலியன் இயற்கணிதம், குழூஉக்குறிக்