பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shape

1322

shared printer


கலை,கணினிச் சுற்று வழிகள் ஆகியவற்றுக்கும்,செய்தித் தொடர்புகளுக்கும் தமது தரவு கணிதக் கோட்பாட்டின் மூலம் அருந்தொண்டு புரிந்தவர்.

shape:வடிவம்.

share:பங்கமைப்பு;பங்கு:நடுத்தர மற்றும் பேரளவு தரவு செய் முறைப்படுத்தும் பொறியமைவுகளைப் பயன்படுத்துவோரின் அமைவனம்.

shared DASD:பகிர்மான டிஏஎஸ்டி:தனியொரு தரவு மையத்தினுள் உள்ள,இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிகள் மூலம் அணுகக்கூடிய வட்டு அமைப்புமுறை.சொந்தக் கணினி இணையங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகிற வட்டுகள்,கோப்பு புரவலர்கள் அல்லது தரவுத்தள புரவலர்கள் எனப்படும்.

shared file:பகிர்மானக் கோப்பு;பங்கிடும் கோப்பு;பகிர்கோப்பு:இரண்டு பொறியமைவுகளினால் ஒரே சமயத்தில் பயன்படுத்தப்படும் நேரடி அணுகுச் சாதனம்.இது இரு கணினிப் பொறியமைவுகளை இணைக்கிறது.

shared folder:பகிர்வுக் கோப்புறை:ஒரு பிணையத்தில் இணைக் கப்பட்ட மேக்சிஸ்டம் 6.0 அல்லது பின்வந்த இயக்க முறைமையில் செயல்படும் ஒரு மெக்கின்டோஷ் கணினியில்,ஒரு பயனாளர் பிணை யத்தின் பிற பயனாளர்களுக்கு அணுக அனுமதி வழங்கக்கூடிய ஒரு கோப்புறை.ஒரு பீசியில் வழங்கப்படும் நெட்வொர்க் கோப்பகம்(Network Directory)என்பதோடு ஒத்தது.

shared logic:பகிர்வுத் தருக்கம்:ஒரு செயல்பாட்டை நடைமுறைப் படுத்த ஒன்றுக்கு மேற்பட்ட மின்சுற்றுகள் அல்லது மென்பொருள் நிரல்கூறுகளைப் பயன்படுத்துதல்.

shared memory:பகிர்வு நினைவகம்:1.ஒரு பல்பணிச் சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்கள் அணுகுகின்ற நினைவகம்.2.இணைநிலைச் செயலிகள் கொண்ட கணினி அமைப்புகளில் தகவல் பரிமாறிக் கொள்ளப் பயன் படுத்தப்படும் நினைவகப்பகுதி.

shared printer:பகிர்வு அச்சுப்பொறி:ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அச்சுப்பொறி.பிணையத்தில் இணைக்கப் படும் அச்சுப்பொறியும் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளால் பயன்படுத்திக் கொள்ளப்படும்.