பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shared resource

1323

shelfware


shared resource : பகிர்வு வளம் : 1. ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்கள் அல்லது நிரல்களால் பயன்படுத்திக் கொள்ளப்படும் ஒரு சாதனம் அல்லது தரவு அல்லது நிரல். 2. விண்டோஸ் என்டியில் பிணையப் பயனாளர்கள் அணுகுவதற்குரிய கோப்பகங்கள், கோப்புகள், அச்சுப் பொறிகள் போன்ற வளங்கள்.

shareware : பகிர்வு மென் பொருள் : "வாங்கும்முன் பயன்படுத்திப் பார்" என்ற அடிப்படையில் வினியோகிக்கப்படுகின்ற பதிப்புரிமை பெற்ற மென்பொருள். பரிசோதனை காலத்துக்கு அப்பாலும் அம்மென்பொருளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், அதனை உருவாக்கியவருக்கு ஒரு சிறிய தொகையை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

shareware and freeware : பகிர்வு மென்பொருள்-இலவச மென்பொருள்.

shareware centre : பகிர்வு மென்பொருள் மையம்;பங்கீட்டு மென்பொருள் மையம்.

sharing resources : வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

sharing, time : காலப் பகிர்வு.

sharpness : கூர்மை : ஒரு காட்சிச் சாதனம் எண்மான வரைவி, அச்சுப் பொறி, சுருள்பதிப்பி போன்றவற்றில் உண்டாகும் உருக்காட்சிகளின் தெளிவும் தரமும்.

sheet : தாள்.

sheet, coding : குறிமுறைத் தாள்.

sheet-fed scanner : தாள் செருகு வருடுபொறி : இவ்வகை வருடு பொறிகளில் ஒரு நேரத்தில் ஒற்றைத்தாள் உள்ளிழுக்கப்பட்டு, நிலைத் திருக்கும் வருடு பொறியமைவின்மீது நகரும்போது பட/உரைத் தரவு பதியப்பட்டுவிடும். பல பக்கங்கள் உள்ள ஆவணங்களை தானாகவே தொடர்ச்சியாக வருடியெடுக்கும் வசதி இவ்வகை வருடு பொறிகளில் உண்டு.

sheet feeder : தாள் ஊட்டி;தாள் தள்ளி : ஒர் அச்சுப்பொறியுடன் இணைக்கப்படும் ஒரு சாதனம். இது, காகிதத் தாள்களை அல்லது உறைகளை ஒவ்வொன்றாக தானாகவே உட்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக் கும். இது பெரும்பாலும் அச்சுப் பொறியின் அழுத்தத் தகட்டுப் பாளத்தில் அமைந்திருக்கும். இதனை அச்சுப்பொறி எந்திர முறையிலோ மின்னியல் முறையிலோ இயக்குகிறது.

shelfware : மாடப் பொருள்கள் : ஒரு வணிகரின் காட்சி மாடத்தில்