பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

slope

1341

. sm


அல்லது கூட்டல் அதிகரிப்புச் சாதனத்தைப் பொருத்துதல். ஒரு புதிய பதிப்பு எண்ணை உருவாக்குவதன்மூலம் இத்தகைய சேர்ப்பினை அடையாளங் காட்டாத வகையில் இது செய்யப்படுகிறது.

slope : சரிவு நிலை : ஒரு கிடைமட்ட அலகில் ஒரு வளைகோடு ஏறுகிற அல்லது இறங்குகிற விகிதம்.

slot : செருகுவாய்;கொள்தடம்;துளை விளிம்பு;பொருத்துமிடம் : கூடுதலான அச்சிட்ட சுற்றுவழிப் பலகைகளுக்கான கொள்தடம். வட்டினை அல்லது நாடாவைச் செருகுவதற்கும் எடுப்பதற்குமுரிய கொள்தடம். செய்தித் தொடர்புகளில், ஒரு குறுகிய அலைவரிசை.

slotted ring : செருகுவாய் வளையம்.

Slow Keys : மெதுவிசைகள் : மெக்கின்டோஷ் கணினிகளில் விசைப் பலகையில் இருக்கும் ஒரு வசதி. டாஸ், விண்டோஸ் முறைமைகளிலும் இவ்வசதி உள்ளது. பட்டறிவு இல்லாத பயனாளர்கள் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது கவனக்குறைவாக அருகிலுள்ள பிற விசைகள்மீது விரல்கள் லேசாகப்பட்டாலும் விரும்பத்தகாத எழுத்துகள் பதிவாவதுண்டு. இந் நிலைமையைப் போக்கவே இவ்வசதி வழங்கப் பட்டுள்ளது. ஒரு விசைமீது சிறிது நேரம் விரலை அழுத்தி வைத்திருந்தால்தான் அதற்குரிய எழுத்துத் திரையில் பதிவாகும்.

SLSI : எஸ்எல்எஸ்ஐ;சில்சி : மீப் பெரிய நிறைகோல் ஒருங்கிணைப்பு என்று பொருள்படும் Super Large Scale Integration என்பதன் தலைப் பெழுத்துச் சுருக்கம். ஒரு சிப்புக்கு பத்து இலட்சம் அல்லது கூடுதல் பாகங்களைக் கொண்ட மிகஅதிக அடர்த்தி சிப்புகளைப் பயன்படுத்துதல்.

SLT : எஸ்எல்டி : திண்மத் தருக்க முறை உத்தி எனப் பொருள்படும் Solid Logic Technique என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதனை IBM புனைந்தது. ஒரு சுற்றுவழித் தகவமைவினை உருவாக்குவதற்கான நுண் மின்னணுத் தொகுதி உத்தியைக் குறிக்கிறது.

slug : புடைப்பு;பருங்குழை : காகிதத்தில் அச்சடிப்பதன் மூலம், அச்சடிக்கத்தக்க எழுத்து அச்சுகளின் உருக்காட்சியைக் கொண்டு செல்கிற உலோக மெத்தை.

. sm : . எஸ்எம் : ஒர் இணைய தள முகவரி சான்மாரினோ