பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

soft sector

1350

software base


போது மென் மடக்கு, அச்சுப் பொறியால் வரி இறுதிக் குறியீடாக மாற்றப்படுகிறது.

soft sector : மென் வட்டக்கூறு;மென் பிரிவு;மென் பகுதி : ஒரு வட்டில் எழுதப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி அந்த வட்டின்மீது வட்டக் கூறுகளை அல்லது பகுதிகளைக் குறிக்கும் முறை. வட்டிலுள்ள தரவுகளின் அமைவிடங்களை மென்பொருள் கணிப்புகள்மூலம் நிருணயிக்கும் முறை.

soft sectored disk : மென் கூறாக்கிய வட்டு : ஒரு குறிப்பீட்டுப் புள்ளியிலிருந்து மென்பொருள் படிமுறை வரிசையினால் கூறுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒருவட்டு. வன் கூறாக்கிய வட்டுகளின் கூறுகள், வன்பொருள் குறியீடுகளினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். பெரும்பாலான வட்டுகள் மென் கூறாக்கத்தைப் பயன்படுத்துகின்றன.

software : மென்பொருள்;மென் சாதனம்;மெல்லியல்பு;கணினி செயல்முறை : ஒரு கணினிப் பொறியமைவிலுள்ள இரும்பு அல்லது வன்பொருளுக்கு மாறுபாடாக, செயல்முறைகளின் தொகுதியைக் குறிக்கும் சொல். இவை கணினிப் பொறியமைவின் செயற்பாட்டையும், வன் பொருள்களின் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு கணினிப் பொறியமைவுக்கான மென்பொருள்கள், பயன்பாட்டுச் செயல்முறைகள் என்றும் பொறியமைவுச் செயல் முறைகள் என்றும் வகைப் படுத்தப்பட்டுள்ளன.

software application : மென் பொருள் பயன்பாடு : ஒரு மென்பொருள் அல்லது கணினி செயல்முறைக்கான பொதுப்படையான பெயர்.

software architecture : மென் பொருள் உருவாக்கக் கலை;மென்பொருள் கட்டமைப்பு : பொறியமைவு மென்பொருள் பயன்பாட்டினை வடிவமைத் தல். இதில் மரபு முறை, மற்ற செயல்முறைகளுடன் இடைத் தொடர்பு கொள்வதற்கான இடை முகப்புகள், எதிர்கால நெகிழ்திறன், விரிவாக்கத் திற்கான வசதிகள் உள்ளடங்கியிருக்கும்.

software base : மென்பொருள் ஆதாரம்;மென்பொருள் அடிப்படை;மென்

பொருள் தளம் : ஒரு குறிப்பிட்ட கணினிப் பொறியமைவுக்கான மென் பொருள். மென்பொருள் ஆதாரம் எவ்வளவு விரிவாக