பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

special purpose

1364

speech recognition


லிருந்து விண்கலங்களைக் கண்காணிப்பதுவரை பலவகையான பணிகளைச் செய்யத்தக்கது.

special purpose programming language : சிறப்பு நோக்க நிரல் தொடர் மொழி : ஒரு குறிப்பிட்ட வகையான சிக்கல் அல்லது பயன்பாட்டினை மட்டும் கையாளும் வகையில் உருவாக்கப்பட்ட நிரல்தொடர் மொழி.

specialists : வல்லுநர்கள்.

special symbol : சிறப்புக் குறியீடு.

specific address : குறிப்பிட்ட முகவரி.

specification : விளக்கக்குறிப்பு : விவர வரையறை : குறிப்பீடு : ஒரு சாதனம், செயல்முறை அல்லது உற்பத்திப் பொருளின் தேவைப்படும் தன்மைகள் பற்றிய விளக்கமான குறிப்பு.

specification sheet : விளக்கக் குறிப்பு தாள்;விவர வரையறை தாள் : ஆர்பீஜி (RPG) சொற்றொடர்களை குறியீடு செய்யப் பயன்படும் படிவம்.

specification systems : முறைமை வரன்முறை.

specific fields : குறிப்பிட்ட துறைகள்.

specs : ஸ்பெக்ஸ் : specifications என்பதன் குறும்பெயர்.

spectral colour : பட்டை ஒளி வண்ணம் : கணினி வரைகலையில் ஒளியின் ஒர் ஒற்றை அலை நீளத்தின் வண்ணம். இந்த ஒளிப்பட்டையில் அடிப்பகுதியில் செங்கருநீல வண்ணத்தில் தொடங்கி மேல்நோக்கி நீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என்று சென்று சிவப்பு வண்ணத்தில் முடியும்.

spectral response : பட்டை ஒளிப்பதில் செயல் : பார்க்கும் ஒளியின் வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளியுணர்வுச் சாதனத்தின் மாறியல் வெளிப்பாடு.

spectrum : நிறமாலை : ஒரு குறிப்பிட்ட வகைக் கதிர்வீச்சின் அலைவரிசை வரம்பெல்லை ஆகும். சூழ்நிலையைப் பொறுத்து ஒரு பொருளினால் உமிழப்படலாம் அல்லது உட்கவரப்படலாம்.

speech recognition : பேச்சு கண்டறிதல்;பேச்சறிதல் : நினைவகத்தில் உள்ள குரல் அமைப்புகளில் நுண் ஒலி பெருக்கியிலிருந்து வரும் சமிக்கைகளின் அமைப்புகளை ஒப்பிட்டு சேர்க்கும் கணினியின் திறன். இதன்மூலம் பேசவரும் சொற்களை அது அறிந்து கொள்கிறது.