பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stand alone graphics

1372

standard function


stand alone graphics system : தனியாக நிற்கும் வரைகலை அமைப்பு : நுண் கணினி அல்லது சிறு கணினி, சேமிப்பகம், ஒளிக்காட்சித்திரை முகப்பு மற்றும் உள்ளீடு/வெளியீடு சாதனங்களைக் கொண்டுள்ள வரைகலை அமைப்பு.

stand alone programme : தனித்தியங்கும் செயல்முறை : ஒரு செயல் பாட்டுப் பொறியமைவு அல்லாமல் இயக்குவதற்கு வேறெந்த மென் பொருளும் தேவைப்படாதிருக்கிற ஒரு கணினிச் செயல்முறை. தனித் தியங்காத செயல்முறைகளுக்குப் பொதுவாக வேறு மென்பொருள்களை ஏற்றுதல் அல்லது ஒரு மென்பொருள் வாலாய நூலக அணுகுதல் தேவைப் படும். பெரும்பாலான வணிக முறை மென்பொருள் பயன்பாடுகளில் தனித்தியங்கும் செயல்முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.

stand alone server : தனித்தியங்கு வழங்கன்.

stand alone system : தனியாக நிற்கும் அமைப்பு : வேறொரு கணினி யுடன் இணையாமல், வேறொன்றின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுயேச் சையாக இயங்கக்கூடிய தன்னிறைவு கணினி அமைப்பு.

standard செந்தரம்;திட்ட அளவு : 1. ஒரே சீரான நடை முறைகள் மற்றும் பொதுவான தொழில் நுட்பங்களை உருவாக்க உதவும் வழி காட்டி. 2. கணினி அமைப்பின் செயல்பாட்டை அளக்க உதவும் அளவுகோல். சட்டமுறையான அமைப்பு இதனை விதிக்கலாம் அல்லது பெரிய உற்பத்தியாளரின் நடைமுறையில் சாதாரணமாக உருவாக்கப்படலாம்.

standard analog signals : நிலையான தொடர்முறைக் குறியீடுகள்.

standard buttons : இயல்பான பொத்தான்கள்.

standard cell : செந்தரச் சிற்றம் : சிப்பு உருவாக்கத்திற்கு ஆயத்த மாகவுள்ள மின்னணு செயற்பணியின் முடிவுறுத்தப்பட்ட வடிவமைப்பு. இது ஒரு கடிகாரச் சுற்றுவழி அளவுக்குச் சிறிதாக அல்லது பேரளவுச் செய் முறைப்படுத்திய அளவுக்குப் பெரிதாக இருக்கும். இது வழக்காற்று வடிவமைப்புச் சிப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

standard form : பொது வடிவு.

standard function : முன்னிருப்பு செயல்கூறு : உள்ளிணைந்த செயல்கூறு : ஒரு குறிப்பிட்ட நிரலாக்க மொழியில் உள்ளிணைக்

கப்பட்டுள்ள, பயன்