பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stack segment

1371

stand alone graphics


இயக்ககக் கட்டுப்படுத்திகளுக்கென சீகேட் டெக்னாலஜீஸ் நிறுவனம் உருவாக்கிய வன்பொருள் சமிக்கை வரன் முறை. இந்த இடைமுகத்தின் எஸ்டீ 506/412 பதிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட தர வரையறையாகி விட்டது.

stack segment : அடுக்குக் கூறு : அடுக்கினை வைத்திருப்பதற்கு ஒரு செயல்முறையினால் ஒதுக்கப்பட்டுள்ள நினைவகத்தின் பகுதி.

stackware : அடுக்குக் கூறு : மிகையட்டை அடுக்கு (தரவு), மிகையுரைச் செயல்முறை ஆகியவற்றிலான மிகையட்டைப் பயன்பாடு.

stage analysis : நிலைப் பகுப்பாய்வு : ஒரு அமைப்பாக்கம் தேவைப்படும் தரவுப் பொறியமைவில் ஒரு திட்டமிடும் செய்முறை. இது, அமைவனத்தின் வளர்ச்சிச் சுழற்சியில் நடப்புநிலை, அதன் தரவுப் பொறியமைத் தொழில் நுட்பப் பயன்பாடு ஆகியவை பற்றிய பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டது.

stairstepping : படித் தாவல்;மாடி ஏறுதல்;மாடிப்படி : ஒரு வரைகலைக் கோடு அல்லது வளைகோடுகளை மாடிப்படிகள் போன்ற தோற்றமுடைய தாக அமைத்தல்.

stale data : நாட்பட்ட தரவு.

stale link : நாட்பட்ட தொடுப்பு;பயனற்ற தொடுப்பு : நீக்கப்பட்ட அல்லது வேறிடத்துக்கு மாற்றப்பட்ட ஒரு ஹெச்டீஎம்எல் ஆவணத்தைச் சுட்டுகின்ற பயனற்ற மீத்தொடுப்பு.

stand alone : தனியாக நிற்றல்;தனித்து இயங்கு;தனித்த கணினி : தொலைக்கணினி அமைப்புடன் இணைப்புப் பெற்று அதைச் சார்ந்திருக்காமல் தனியாக நின்று தன்னிறைவு பெற்ற கணினி அமைப்பை விளக்குவது. வேறு எந்தக் கருவியும் இல்லாமல், தனியாக நிற்கும் சாதனம் தானே இயங்கிக் கொள்ளும்.

stand alone computer : தனித்தியங்கும் கணினி : தன்னடக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட கணினி. இதில், மனநிறைவுடன் செயற்படுவதற்கு வேறெந்த வன்பொருளையும் அல்லது மென்பொருளையும் அணுகவேண்டிய தேவை யில்லை. ஒரு சொந்தக் கணினி பொதுவாக ஒரு தனித்தியங்கும் கணினியாகும்.

stand alone graphics : தனித்தியங்கு வரைகலை.