பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. st

1370

ST506 interface


பொருள்படும் Serial Storage Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் இடைமுக வரன்முறை. வளைக் கட்டிணைப்பு (Ring Topology) முறையில் சாதனங்கள் ஒழுங்கமைக்கப் படுகின்றன. ஸ்கஸ்ஸி சாதனங்களுடன் ஒத்திசைவானது. ஒவ்வொரு திசை யிலும் வினாடிக்கு 20 மெகா பைட் வரை தரவு அனுப்பி வைக்க முடியும்.

. st : . எஸ்டீ : ஒர் இணைய தள முகவரி சாவோ டோம்-பிரின்ஸ்பீ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

stable : தொடக்குவிசை சுற்று.

stable tigger circuit : நிலை தொடக்கு விசைச்சுற்று.

stack : அடுக்கு : அடுக்கில் உள்ள பொருள்களை அவற்றின் நினைவக இடத்திற்கு முகவரியிடுவதற்குப் பதிலாக உள் நினைவகத்தில் சேமிக்கப் படும் வரிசைமுறை தரவுப் பட்டியல். அடுக்கின் மேற்பகுதியில் இருந்தோ அல்லது அடியில் இருந்தோ தகவல்களை கணினி எடுக்கிறது.

stacked job processing : அடுக்கப்பட்ட பணி செயலாக்கம் : கணினி அமைப்புக்குத் தருவதற்காக பல்வேறு வேலைகளை அடுக்கி வைக்க அனுமதித்து, அவைகளை ஒவ்வொன்றாக செய்ய அனுமதிக்கும் தொழில் நுட்பம். இயக்க வேண்டிய வேலைகளின் வரிசை அட்டைபடிப்பிக்குத் தரப்படு கின்றது. வேலை கட்டுப்பாட்டு அட்டைகளின்படி ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகிறது.

stacker : அடுக்கி.

stack pointer : அடுக்குச் சுட்டு;அடுக்குக் காட்டி : அடுக்கில் உள்ள இருப்பிடங்களைக் காட்டப்பயன்படும் சுட்டு. அடுக்கிலிருந்து ஒவ்வொரு புதிய தரவு வெளியே எடுக்கப்படும்போது அல்லது உள்ளே அனுப்பப் படும்போது ஒவ்வொரு எண் கூடிக்கொண்டே போகும்.

stack overflow : அடுக்குத் ததும்பல் : அடுக்கில் புதிய இனங்களுக்கு இடமில்லாத வகையில் ஏற்படும் பிழை நிலை. ஒர் இனம் வரவழைக்கப் பட்டு, அடுக்குக் காலியாக இருக்கும்போது அந்த அடுக்கு பற்றாக் குறையாக இருக்கிறது எனக் கருதப்படுகிறது.

ST506 interface : எஸ்டீ 506 இடைமுகம் : நிலை வட்டு