பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

system unit

1422

. SZ



system unit : அமைப்பு அலகு : நிலை வட்டு மற்றும் நெகிழ் வட்டு இயக்கிகள் போன்ற செயலாக்க அலகு மற்றும் சாதனங்களைக் கொண்ட கணினியின் ஒரு பகுதி. ஐபிஎம். பீசி ஏற்புடைய அமைப்பு அலகில் நுண் செயலக சிப்பு, ரோம், ரேம் மற்றும் உள்ளீடு/வெளியீடு வழித்தடம் ஆகியவை இருக்கும். ஒன்று, இரண்டு அல்லது பல தட்டு இயக்கிகளும், வெளிப்புறப் பொருள்களைச் சேர்ப்பதற்கான விரிவாக்கப் பகுதிகளும் அதில் இருக்கலாம்.

system user ; அமைப்பு பயனாளர் : ஒரு அமைப்பின் வசதிக்காகப் பயன்படுத்தும் ஒரு நபர், சாதனம் அல்லது ஒரு அமைப்பு.

system utility programms : அமைப்பு பயன்பாட்டு நிரல் தொடர்கள் : சிக்கல்களுக்குத் தீர்வு காணும்போதோ அல்லது இயக்கத்தின் ஒட்டுமொத்த, திறனை மேம்படுத்தவோ அமைப்பு நிரல் தொடராளருக்கு உதவும் நிரல் தொடர்களின் தொகுதி.

System V : சிஸ்டம் V : ஏடீ & டீ நிறுவனத்தினர் வெளியிட்ட யூனிக்ஸின் ஒரு பதிப்பு. இது தரப்படுத்திய பதிப்பாகும். இதனடிப்படையில் பல்வேறு வணிகத் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டன.

system V release 4. 0 : சிஸ்டம் V வெளியீடு 4. 0 : 1989இல் வெளியிடப்பட்ட யூனிக்சின் ஒருங்கிணைக்கப்பட்ட பதிப்பு.

.sz : . எஸ்இஸட் : ஓர் இணைய தள முகவரி ஸ்வாஸிலாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.