பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

text mode

1445

texture


உணர்த்துகிறது. சொல் செயலகமும் உரைப்பகுதியை சமாளிக்கிறது என்றாலும் அதற்கு தேடிக்கொண்டு வரும் திறன்கள் குறைவாகவே இருக்கும்.

text mode : உரைப் பாங்கு : கணினித் திரையகத்தின் ஒரு வகைக் காட்சிப் பாங்கு. இந்தப் பாங்கில் எழுத்துகள், எண்கள், ஏனைய குறிகள் மட்டுமே திரையில் தோன்ற முடியும். வரைகலைப் படிமங்களைக் காட்ட முடியாது. அதுமட்டுமின்றி, வடிவமைக்கப்பட்ட எழுத்து வடிவங்களையும் (சாய்வெழுத்து (Italics), மேல்எழுத்து (superscript), கீழ்எழுத்து (subscript) காட்ட முடியாது. சுருக்கமாக, விசிவிக் (WYSIWYG-What You See Is What You Get) சாத்தியமில்லை எனலாம்.

text processing : உரை செயலாக்கம் : நிரல்தொடர் கட்டுப்பாட்டின் கீழுள்ள அகரவரிசை தரவுகளைக் கையாளுதல்.

text processor : உரை செயலாக்கி.

text revision : உரை மாற்றமைவு.

text segment : உரைப் பகுதி.

text streame : உரை பாய்வு.

text string search : உரைச்சரம் தேடல்.

text suppression : உரை அமுக்கம்.

text system : உரைப்பகுதி அமைப்பு : சொற்பகுதி தகவலைக் கையாள வன்பொருளையும் சிறப்பாக எழுதப்பட்ட மென்பொருளையும் தொகுத்தல்.

text transfer : உரை மாற்றல் : முகப்பிலிருந்து தூர கணினிக்கு உரைக் கோப்புகளை மாற்றும் முறை.

text to columns : நெடுக்கையாக்கு.

text-to-speech : எழுத்து ஒலி வடிவு : எழுத்திலிருந்து ஒலி வடிவம.

text transmission : உரை அனுப்பீடு.

text transparency : உரை ஒளிர்மை, சொல் புலப்பாடு.

textual scrolling information : சொல்லோட்டத் தகவல்.

texture : இழைவு இழைமம் : கணினி வரைகலையில், இரு பரிமாண அமைப்பினை முப்பரிமாண மேற்பரப்பின் சிக்கலான தோற்றத்தைத் தர பயன் படுத்துவது. இதில் கலவையை மாதிரியாக அமைத்தல், ஒவியங்கள் அல்லது எண்முறை ஒளிப்படங்களை அடிக்கடி