பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

texture mapping

1446

theorem


பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக இல்லாமலேயே செய்யப்படுகிறது. முப்பரிமான தரவுத்தள அமைப்புகள் செய்யமுடியாத கலவையை படத் துணுக்குகள் சேர்க்கின்றன. ஒரு கணினி படத்தில் (pixel) படப்புள்ளிகளை இருப்பிடமான ஏற்பாட்டில் செய்யும் வேலையை துணி நெசவில் பாவு நூல் வார்ப்பு மற்றும் ஊடிழைகளுடன் ஒப்பிடப்படுவதுண்டு. ஆகவேதான் இச் சொல் உருவானது.

texture mapping : இழைப்பு விவரணையாக்கம் : கணினி வரைகலையில், ஒரு சிறப்பு மேற்பரப்பை உருவாக்குதல். இவற்றை நெறிமுறையுடன் அமைகக முடியும. ஒரு பொருளைச் சுற்றி துணை உருவத்தை மின்னணு முறையில் மேலமைப்பது.

text window : உரைச் சாளரம் : சில கணினி வரைகலை அமைப்புகளில் காட்சித்திரைகளில் காட்டப்படும் சொற்களின் பகுதி.

. tf : . டீ. எஃப் : ஒர் இணைய தள முகவரி தெற்கு ஃபிரான்ஸ் பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. tg : . டீஜி : ஒர் இணயை தள முகவரி டோகோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

TGA : டீஜிஏ : 1. டார்கா (targa) என்பதன் சுருக்கம். ட்ரூவிஷன் நிறுவனம் உருவாக்கிய கிடைவரி (Raster) வரைகலைக் கோப்பு வடிவம். 16 துண்மி (பிட்), 24துண்மி (பிட்), 32 துண்மி (பிட்) நிறங்களைக் கையாளவல்லது. 2. மிகு தெளிவுள்ள ஒளிக்காட்சி வரைகலைப் பலகை வரிசைகளின் வணிகப் பெயர்.

. th : . டீஹெச் : ஒர் இணைய தள முகவரி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

the microsoft network (MSN) : மைக்ரோசாஃப்ட் நெட்வொர்க் (எம்எஸ்என்) : மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின், பல்வேறு வசதிகள் நிறைந்த நிகழ்நிலைச் சேவை. 1995ஆம் ஆண்டு ஆகஸ்டில், விண்டோஸ் 95 அறிமுகப்படுத்தப்பட்ட போது தொடங்கப்பட்டது.

theorem : தேற்றம் : எண்ணாக்கப்படிகூடிய ஒரு சொற்றொடர். ஒரு செல்லக்கூடிய வாக்குவாதத்தின் முடிவு.