பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thin space

1450

third-party lease


கொடுக்கும். ஆனால் நிர்வாகப் பணிகளைச் சிக்கலாக்கிவிடும். எடுத்துக்காட்டாக, கிளையனிலிருக்கும் மென்பொருள்களை மேம்படுத்துவது மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

thin space : மெல்லிடவெளி;மெல்லிய இடவெளி : ஒர் எழுத்துருவில் அதன் பாயின்ட் அளவில் நான்கில் ஒரு பங்குள்ள கிடைமட்ட இடவெளி. எடுத்துக்காட்டாக, 12-பாயின்ட் அளவுள்ள ஒர் எழுத்துருவில் மெல்லிடவெளி 3-பாயின்ட் அகலத்தில் இருக்கும்.

thin window display : மெல்லிய சாளரக் காட்சி : விசைப்பலகைகள், பாக்கெட் கணினிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு வரி காட்சித்திரை. எல்சிடி அல்லது எல்இடி காட்சித் திரை.

third generation computers : மூன்றாம் தலைமுறை கணினிகள் : டிரான்சிஸ்டர்களுக்குப் பதிலாக பொருள்களை வாமனப் படுத்தி ஒருங்கிணைந்த மின் சுற்றுக்களைப் பயன்படுத்தும் கணினிகள், விலை குறைப்பு, வேகமான இயக்கம், கூடுதல் நம்பகத் தன்மை ஆகியவற்றை தரும் இவை 1964 இல் அறிமுகப் படுத்தப்பட்டன. இன்னும் ஆதாரத் தொழில்நுட்பமாக இவையே உள்ளன.

third generation language : மூன்றாம் தலைமுறை மொழி : உயர்நிலை மொழிகளின் இன்றைய தலைமுறை இதுவே. சான்று : பேசிக், சி மற்றும் பாஸ்கல்.3GL என சுருக்கி அழைக்கப்படுகிறது.

third party : மூன்றாவதாள்;மூன்றாம் ஆள்;மூன்றாம் குழுமம், தொடர்பற்றவர்;தொடர்பிலாக் குழுமம் : ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் கணினிகள் மற்றும் புறச்சாதனங்களுக்குரிய உதிரி பாகங்களைத் தயாரித்து விற்றுவரும் குழுமத்தை இவ்வாறு அழைப்பர். பெரும்பாலும் பெரிய நிறுவனத்தோடு இவர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இருக்காது. கணினித் தயாரிப்பாளர், கணினிப் பயனாளர் நேரடித் தொடர்புடைய இந்த இருவர்க்கும் தொடர்பில்லாத மூன்றாவது ஆள் என்ற பொருளில் இவ்வாறு வழங்கப்படுகிறது.

third-party lease : மூன்றாமவர் அடைமானம் : ஒரு தனி நிறுவனம் உற்பத்தியாளரிடமிருந்து வாங்கிய கருவியை தானாக வேறு ஒரு இறுதிப் பயனாளருக்குத் தரும் ஒப்பந்தம்.