பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tiling screen

1456

time log


tiling screen : சாயும் திரை : எளிதாகப் பார்க்க வசதியாக, முன் பின்னாகவும், மேலிருந்து கீழாகவும் மாற்றிக் கோணம் அமைக்கக்கூடிய ஒளிக்காட்சித் திரை.

tilt down : கிடை மட்டமாய் சரிவாக்கு.

tilt left : இடப்பக்கம் சரிவாக்கு.

tilt right : வலப்பக்கம் சரிவாக்கு.

tiltup : சாய்த்து உயர்த்து.

time : வேகம், காலம்.

time accass : அணுகு நேரம்.

time acceleration : முடுக்கு நேரம்.

time add : நேரம் கூட்டு.

time add-substract : நேரம் கூட்டு-கழி.

time, available machine : இருக்கும் பொறி நேரம், மொழிமாற்று நேரம்.

time, compile : தொகு நேரம்.

timed backup : நேரங்குறித்த காப்பு.

time division : நேரம் பிரிப்பி : தகவல் தொடர்பு வழித்தடத்தின் பரப்புத் திறனை மேம்படுத்த பயன்படுத்தப்படும் செலுத்து நுட்பம். துடிப்புக் குறி யீட்டுக் குறிப்பேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்முறையில் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு தரவு இணைப்புக்கும் ஒரு குறிப் பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில்தான் அது தரவுகளை அனுப்பிப் பெறும். அதன் அடுத்த நேரம் வரும்வரை அது அமைதியாக இருக்கும். அந்த நேரத்திற்குள் மற்ற தரவு இணைப்புகள் செயலாற்றும். இதன்படி பல்வேறு, தொடர்பில்லாத பயனாளர்கள் ஒரே தகவல் தொடர்பு இணைப்பை ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.

time division multiplexing (TDM) : காலப் பிரிவு பல்வழி தரவு தருமுறை; காலப்பிரிவுப் பெருக்கம் : ஒரு பொது மின்சுற்றுப் பாதையில் பல வழித் தடங்கள் தகவலை அனுப்பும் முறை. இம் முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முறைவைத்து ஒவ்வொரு வழித்தடத்திற்கும் பொது மின்சுற்றை ஒதுக்குவது.

time error, run : இயக்க நேரப்பிழை.

time frame : காலவரையறை.

time, idle : செயல்படா நேரம்.

time log : காலப் பதிவு : 24 மணிநேரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில்