பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Turing

1484

turnaround document


அமைப்புகளில் உள்ள பாஸ்கல் நிரல் தொடரமைப்பு மொழியின் புகழ்பெற்ற பதிப்பு.

Turing : தூரிங் : 1982இல் ஆர். சி. ஹோல்ட் மற்றும் ஜே. ஆர். கார்டி ஆகிய இருவரும் டோரொன்டோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய நிரல் தொடரமைப்பு மொழி. பாஸ்கல் நிரல் தொடர் மொழியில் உள்ள சில இயலாமைகளை நீக்குவதற்கென்றே இதன் அடிப்படை வடிவமைப்பு இலக்கினைக் கொண்டது. யூனிக்ஸ் இயக்க அமைப்பின் கீழும் இயங்குகிறது.

Turing Alan M. : தூரிங் ஆலன் எம் (1912-1954) : ஆங்கில கணிதவியாளர் மற்றும் தருக்க வியலார். இறப்பதற்குச் சற்று முன்பு உலகின் முதல் நவீன அதிகவேக எண்முறை கணினிகளின் வடிவமைப்பை உருவாக்கியவர்.

Turing machine : தூரிங் எந்திரம் : ஒரு சாதனத்தின் கணித மாதிரி யமைப்பு. ஒரு நீண்ட நாடாவின் தற்போதைய நிலையை ஒட்டி அதன் உள்ளமைப்பை மாற்றுதல், எழுதுதல், படித்தல் மற்றும் நகர்த்துதல் ஆகிய வற்றைச் செய்வது. ஆகவே கணினி போன்ற நடத்தையின் முன் மாதிரி ஆனது.

Turing's test : தூரங்கின் சோதனை : ஒரு கணினியிடம் அறிவுக் கூர்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்ய ஆங்கில கணிதவியலாரான ஆலன் தூரிங் உருவாக்கிய சோதனை. இதில் பங்குகொள்பவர்கள் ஒரு மனிதரும் ஒரு கணினியும். பதில் சொல்பவர்களில் யார் மனிதர், யார் கணினி என்பதை மூன்றாவது நபர் கண்டுபிடிப்பார். இந்தச் சோதனை யின்படி, தேர்வாளரை கணினி எந்த அளவுக்கு ஏமாற்றுகிறது என்பதை வைத்து கணினியின் வெற்றியும், அதற்கு ஆதாரமாக அதன் திறமை, அறிவுக் கூர்மையும் கண்டறியப்படும்.

turn around : சுழற்சி திரும்ப வரும் : ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம். ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய ஆகும் நேரம். ஒரு வேலையைச் செயலாக்கத்திற்குக் கொடுப்பதற்கும், முடிந்த வெளியீடு பெறுவதற்கும் இடையில் ஆகும் நேரம்.

turnaround document : சுழற்சி ஆவணம்;திரும்பிவரும் ஆவணம் : எந்திரம் படிக்கும் உள்ளீடாக ஒரு நிறுவனத்திற்குக் கணினி அமைப்பு அளிக்கும் வெளியீடு. (வாடிக்கையாளர்