பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

typeface

1491

typeover mode


வினங்களை உருவாக்கி அறிவிக்கலாம். (எ-டு) சி-மொழியில் struct அறிவிப்பு மூலம் புதிய தரவினங்களை உருவாக்கலாம். சி++, ஜாவா, சி# மொழிகளில் classஎன்ற அறிவிப்பின் மூலம் புதிய தரவினங்களையும் அவற்றின் பண்புகள், வழிமுறைகளையும் வரையறை செய்ய முடியும்.

typeface : அச்சுரு : அச்சிடுவதற்கான, குறிப்பிட்ட, பெயரிடப் பெற்ற எழுத்துகளின் தொகுதி. (எ-டு) )Helvetica Bold Oblique. இது குறிப்பிட்ட கோணத்தில் சாய்வும் (Obliqueness), குறிப்பிட்ட அளவு கோடுகளின் தடிமனும் (Stroke Weight) கொண்டவை. அச்சுரு, எழுத்துரு (Font) விலிருந்து மாறுபட்டவை. எழுத்துருக்கள் குறிப்பிட்ட உருவளவில் (Point Size) உரு வாக்கப்படுகின்றன. அச்சுரு, அச்சுருக் குடும்பத்திலிருந்து மாறுபட்டவை (எ-டு) Helvetica Family. உறவுடைய பல அச்சுருக்களின் குழு.

typeface family : அச்செழுத்துக் குடும்பம் : வடிவமைப்பில் ஒன்றையொன்று தொடர்புள்ள அச்செழுத்துகளை குழுவாக அமைத்தல்.

type font : அச்செழுத்து வகை.

typematic : தொடர் அச்சு : அழுத்திக் கொண்டிருக்கும் வரை திரும்ப திரும்ப அடித்துக் கொண்டிருக்கும் விசைப் பலகை எழுத்து.

typematic rate : தொடரச்சு விகிதம் : தொடர்ச்சியாக கீழே இறக்கிய போது திரும்பத் திரும்ப விசைப்பலகை விசைகளை குறியீடு அனுப்பும் வேகம்.

type mismatch error : விவர இன ஒத்திசையாப் பிழை : இரு மாறிகளைக் கையாளும் ஒரு கணக்கீட்டில், இரண்டு மாறிகளும் வெவ்வேறு விவர இனத்தைச் சார்ந்திருந்தால் வரும் பிழை.

typeover : மேல் அழுத்து;மேல் அச்சிடல் : அச்சிடப்பட்ட பிரதியில் தடிமனான எழுத்து வரும் வகையில் ஒரு எழுத்தை ஒரு முறைக்கு மேல் அடிக்கும் அழுத்தும் அச்சுப்பொறியின் திறன்.

typeover mode : மேல் அச்சிடல் முறை : சொல் செயலாக்கம் மற்றும் தரவு நுழைவில், விசைப் பலகை மூலம் தட்டச்சு செய்யப்படும் விசைகள் ஒன்றின் மேலே எழுதினாலோ அல்லது அப்போதைய சுட்டி இருப் பிடத்தினை மாற்றினாலோ இந்நிலை ஏற்படும்.