பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

u

1493

UDP


U

u : யு : பத்துலட்சத்தில் ஒரு பங்கு (106) என்பதைக் குறிக்க கிரேக்க எழுத்து பயன்படுத்தப்படுகிறது. மியூ என்று உச்சரிக்கப்படும். மைக்ரோ (micro) என்று பொருள்படும். சில வேளைகளில் μ என்ற எழுத்துக்குப் பதிலாக u பயன்படுத்தப்படுகிறது.

. ua : யூஏ : ஒர் இணைய தள முகவரி உக்ரைன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

UA : யுஏ : எண்ணிக்கை தரப்படாத ஏற்பு.

UAE : யுஏஇ : Unintererruptible Application Error என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர். தடைவராத பயன்பாட்டுப் பிழை. விண்டோஸ் பதிப்பு 3. 0வில் உள்ள பயன்பாட்டு நிரல் தொடர்.

UCSD Pascal : யுசிஎஸ்சிடி பாஸ்கல் : சாண்டியாகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் உருவாக்கிய பாஸ்கல் நிரல் தொடர் மொழியின் புகழ் பெற்ற பதிப்பு.

UCSD P-System : யுசிஎஸ்சிடி பீ-அமைப்பு : சாண்டியாகோவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கென்னத் பவுல்ஸ் உருவாக்கிய நிரல் தொடர் உருவாக்கும் அமைப்பு. ஒரு செயல் பாட்டு அமைப்பு, சொல் தொகுப்பி மற்றும் ஃபோர்ட்ரான், மைக்ரோசாஃப்ட் பேசிக் தொகுப்பிகள் ஆகியவை இதில் அடங்கும். 'P' என்பது pseudo computers என்னும் போலி கணினிகள் என்பதைக் குறிக்கும். இந்த அமைப்பின் தொகுப்பிகள் சரியான பீ- குறியீட்டை உருவாக்குகின்றன. இக்குறியீடு போலி கணினிகளில் இயங்கக்கூடிய பீ- அமைப்பில் ஒடும் கணினிகளுக்கு குறைந்த மொழி பெயர்ப்பு வசதி அளித்தால் போதும். பீ-குறியீடு கணினிக்காக குறியீடுகளை மாற்றித்தருகின்றன.

UDP : யுடிபீ : பயனாளர் தரவுச் செய்தி நெறிமுறை என்று பொருள்படும் User Datagram Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டீசிபி/ஐபீ-க்குள்ளேயே இணைப்பில்லா (Connection