பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

under colour separation

1497

underscore



நிலை. ஒரு மின்னஞ்சலை முகவரிதாரருக்குச் சேர்ப்பிக்க முடியாமல் போனால், அஞ்சல் வழங்கன அந்த மடலை, காரணத்தை விளக்கும் பின்குறிப்புடன் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பிவைக்கும். மின்னஞ்சல் முகவரி தவறாக இருக்கலாம். முகவரிதாரரின் அஞ்சல் பெட்டி நிரம்பியிருக்கலாம்.

under colour separation : மூல வண்ணப் பிரிப்பு : சிஎம்ஒய்கே வண்ண அமைப்பில், வண்ண அச்சிடலின் மூலவண்ணங்களான வெளிர்நீலம் (கியான்), செந்நீலம் (மெஜந்தா), மஞ்சள் நிறங்களைப் பிரித்து அவற்றுக்குச் சமமான சாம்பல் நிற அளவுகளாய் மாற்றி கறுப்புமையால் அச்சிடும் முறை. இந்த முறையில், வண்ணமைகளைக் கலந்து உருவாக்கும் சாம்பல் நிறத்தைவிடத் தெளிவாகவும், கூர்மையாகவும் அமையும்.

underflow : கீழோட்டம் ; தேக்க இயலா கீழ்நிலை : 1. கணினியின் சேமிக்கும் திறனைவிடக் குறைவான எண்ணிக்கையில் கணக்கிட்டு முடிவுகளைக் கணினி தருவதால் ஏற்படும் சூழ்நிலை. 2. மிதக்கும் புள்ளிக் கணக்கீட்டில் மடங்கின் கூட்டலுடன் எஞ்சியதைச் சேர்த்தால் மைனஸ் எண்வரும் சூழ்நிலை.

underlining : அடிக் கோடிடல்.

undernet : அண்டர்நெட் : இணைய தொடர் அரட்டை (IRC) க்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டுப் பிணையம். மிகப்பெரிய, மிகச்சிக்கலான ஐஆர்சி பிணையத்துக்கு மாற்றாக 1992 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுபற்றிய விவரங்கள் undernet. org என்ற முகவரியில் கிடைக்கின்றன.

underpunch : கீழ்துளை : துளையிட்ட அட்டை பத்தியில் மூல தரக் குறியீட்டுத் துளைக்குக் கீழே போடப்பட்ட இரண்டாவது துளை.

underscan : அண்டர்ஸ்கேன் : காட்சித் திரையில் உள்ள வழக்கமான செவ்வக வடிவ பார்க்கும் பகுதியில் உள்ள ஒரு பகுதி.

underscore : அடிக்கீறு : கீழிறங்கித் தோற்றமளிக்கும் இணைப்புக்குறி. விசைப் பலகையில் இணைப்பு/ கழித்தல் (Minus/Hyphen) குறிக்கு மேல்பகுதியில் இருக்கும். நகர்வு (Shift) விசையுடன் சேர்த்து அழுத்தினால் அடிக்கீறு கிடைக்கும். பெரும்பாலும் இரட்டைச் சொற்களை ஒரே