பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Uniform Resource

1500

unigraphics



Uniform Resource Citation : ஒரு சீரான வள விவரிப்பு : வையவிரிவலையில் ஒரு பொருளைப் பற்றி விவரிக்கப்படும் முறை. ஒருசீரான வள அடையாளங்காட்டிகள் (URIs), படைப்பாளர் பெயர், வெளியிடுவோர் பெயர், தேதி, விலை இவை போன்ற பண்புக்கூறுகளையும், மதிப்பு களையும் கொண்டிருக்கும்.

Uniform Resource Identifier : ஒரு சீரான வள அடையாளங் காட்டி : இணையத்தில் எந்த மூலையில் இருப்பினும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் வகை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றுடன் அடையாளங்காட்டப் பயன்படுத்தப்படும் ஒர் எழுத்துச் சரம். இது, ஒரு சீரான வளப் பெயரையும் (URNs) ஒரு சீரான வள இடங்காட்டியையும் (URL) உள்ளடக்கியது.

Uniform Resource Name : ஒரு சீரான வளப் பெயர் : இணையத்தில் இருக்கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக்கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை. ஒரு சீரான வளப் பெயரின் வடிவமைப்பிற்கான வரன் முறைகள், இணையப் பொறியியல் முனைப்புக் குழு (Internet Engineering Task Force - IETF) வின் பரிசீலணையில் உள்ளது. urn : , fpi;, path : போன்ற திட்டமுறையிலடங்கிய அனைத்து ஒரு சீரான வள அடையாளங் காட்டிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அவை, ஒருசீரான வள இடங்காட்டிகளையும் (URLS) கொண்டிருக்காது.

UniForum : யுனிஃபாரம் : 1. திறந்த நிலை முறைமை வல்லுநர்களின் பன்னாட்டுச் சங்கம். யூனிக்ஸ் பயனாளர்கள், நிர்வாகிகளைக் கொண்ட அமைப்பு. 2. யுனிஃபாரம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு, சாஃப்ட்பாங்க் காம்டெக்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட தொடர்ச்சியான யூனிக்ஸ் வணிகக் கண் காட்சிகளைக் குறிக்கிறது.

unity : யூனிஃபை : ஒரு பொது நோக்க டிபிஎம்எஸ் பயன் பாட்டுப் பணித் தொகுப்பு. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் உள்ளமைக்கப்பட்ட ஆப்டி மைசரை (optimizer) அணுக பல முறைகளை வழங்குகிறது.

unigraphics : யூனிகீராஃபிக்ஸ் : மைக் டொனால் டக்ளஸ் சிஏ/ காட்/காம் அமைப்பு. விரிவான