பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

user level security wiz

1512

USRT



user level security wiz : பயனாளர் நிலை பாதுகாப்பு வழிகாட்டி.

username : பயனாளர் பெயர் : ஒரு கணினி அமைப்பில் அல்லது பிணையத்தில் பயனாளர் ஒருவரை அடையாளங்காணப் பயன்படுவது. புகுபதிகைச் செயல்பாட்டில் பயனாளர் முதலில் பயனாளர் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு சரியான நுழைவு சொல்லைத் தர வேண்டும். பயனாளர் ஒருவரின் மின்னஞ்சல் முகவரியில் @ அடையாளத்துக்கு முன்பாக இருக்கும் பெயரே பயனாளர் பெயராகவும் இருக்கும்.

user profile : பயனாளர் குறிப்பு; பயனாளர் விவரம் : ஒரு பாதுகாப்பு அமைப்பின் பகுதியாகப் பயன்படுத்தப்படும் தரவு. சான்றாக, பயனாளரின் வேலை, அறிவுப் பகுதிகளின் பணி, அணுகு சலுகைகள் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியவற்றைக் கூறலாம்.

user programms : பயனாளர் செயல்முறை.

user's manual : பயனாளரின் கையேடு : வன்பொருள் சாதனம், மென்பொருள் உருவாக்கம் அல்லது ஒரு அமைப்பு ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை விளக்கும் ஆவணம்.

user state : பயனாளர் நிலை : மோட்டோரோலா 680x0 நுண் செயலி செயல்படக்கூடிய மிகக் குறைந்த சலுகை நிலை. இந்த நிலையில்தான் பயன்பாட்டு நிரல்கள் செயல்படுகின்றன.

user terminal : பயனாளர் முனையம்.

USnail : யு'ஸ்னெயில் : 1. அமெரிக்க நாட்டு அஞ்சல் சேவைக்குத் தரப்படும் கிண்டலான பெயர். மின்னஞ்சலோடு ஒப்பிடுகையில் பழைய அஞ்சல் சேவை எவ்வளவு மெதுவானது என்பதைச் சுட்ட இவ்வாறு அழைக்கப்படுகிறது. 2. அமெரிக்க நாட்டு அஞ்சல் சேவையினால் வினியோகிக்கப்படும் மடல்.

USRT : யுஎஸ்ஆர்டி : உலகளாவிய ஒத்திசைவு வாங்கி/அனுப்பி என்று பொருள்படும் Universal Synchronous Receiver Transmitter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒத்திசைவுத் நேரியல் தரவு தொடர்புக்குத் தேவையான வாங்கி மற்றும் அனுப்பி இரண்டுக்குமான மின்சுற்றுகளையும் ஒருங்கே கொண்ட ஒற்றை ஒருங்கிணைவு மின் சுற்று.