பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vertical feed

1526

vertical scan rate


வெளி : கிடைவரி-வருடு திரைக்காட்சியில் செங்குத்து வாக்கில் ஒருமுறை திரும்பிவர மின்னணுக்கற்றை எடுத்துக் கொள்ளும் நேரம்.

vertical feed : செங்குத்துச் செலுத்துகை.

vertical frequency : செங்குத்து அலைவரிசை.

vertical justification : செங்குத்தான வரியமைப்பு : மேலிருந்து கீழ்வரையிலான ஒரு முழுப் பக்கத்தின் பத்திகளில் இடத்தைச் சேர்ப்பது அல்லது நீக்குவது பற்றிய செயல்முறை.

vertical recording : செங்குத்துப் பதிவு : ஒரு வட்டில் தரவுகளின் காந்தத் துணுக்குகளை, அருகருகே அல்லாமல் செங்குத்தாக அமைக்கும் தொழில்நுட்பம். இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வட்டில் பல கோடி தரவு எட்டியல்களைச் சேமிக்கலாம்.

vertical redundancy check : செங்குத்தான தேவையற்றவை சோதனை : தரவுத் தொடர்புகளில் உள்ள பிழை நீக்கும் நுட்பம். இதில் ஒரு தரவு கட்டத்தில் உள்ள ஒவ்வொரு துண்மிகளின் வரிசையிலும் சோதனை கூடுதல் எழுத்து சேர்க்கப்படும். VRC என்றும் அழைக்கப்படும்.

vertical resolution : செங்குத்து பிரி திறன் : கோடுகளின் எண் (மேட்ரிச்சில் உள்ள வரிசை).

vertical retrace : செங்குத்துத் திரும்புகை : கிடைவரி-வருடு (Raster Scan) திரைக்காட்சியில் மின்னணுக்கற்றை திரைமுழுக்க நிரப்பியபின், கீழ் வலது மூலையிலிருந்து மேல் இடது மூலைக்குத் திரும்பி வருதல்.

vertical scan frequency : செங்குத்து வருடி (நுண்ணாய்வு) அலைவெண் : ஒரு நொடியில் முழுகாட்சித் திரையும் எத்தனை தடவைகள் புதுப்பிக்கப்பட்டு அல்லது மாற்றி வரையப்படுகிறது என்பது. ஹெர்ட்ஸ் முறையில் அளக்கப்படுகிறது. காட்சி அமைப்புகள் 45 முதல் 200 ஹெர்ட்ஸ் வரையில் உள்ளன. சான்றாக அமெரிக்காவில் வி. ஜி. ஏ. என்பது 56 முதல் 60 ஹெர்ட்ஸ். ஐரோப்பாவில் 70 ஹெர்ட்சுக்கும் மேலே. டி. வி. யானது ஒரு நொடிக்கு 60 அரை படங்களாக புதுப்பிக்கப்படுகிறது. இவை ஒன்று கலந்து 30 முழுப்படம்/நொடிக்கு வருகிறது.

vertical scan rate : செங்குத்து வருடி விகிதம் : ஒரு நொடியில் சிஆர்டி மின்னணு ஒளிக்கற்றையானது எத்தனை முறை சிஆர்டி திரையை முழுமையாக நிரப்பு