பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

videotext

1536

viewer



யீட்டுக்கு ஒரு காட்சித் திரையையும் பயன்படுத்தும் தரவு நுழைவுச் சாதனம். காட்சித் திரை தொலைக்காட்சி போல தோன்றினாலும், தொலைக்காட்சி ஒளிக்காட்சி சமிக்கைகளை அது ஏற்பதில்லை.

videotex systems : வீடியோ டெக்ஸ் அமைப்பு : மனிதர்களுக்கும், சேமிக்கப்பட்ட தரவுத் தளங்களுக்கும் இடையில் பரிமாற்றங்களை அனுமதிக்கும் தனிநபர் கணிப்பு/தரவுத் தொடர்பு கட்டமைப்புகளுக்கான பொதுவான பெயர்.

videotext : ஒளிக்காட்சி வாசகம் : ஒன்றுக்கொன்று செயல்புரியும் மின்னணுத் தரவுப் பொறியமைவு. இது தொலைவாசகம் போன்றது. இதில், தரவுகளைப் பொறியமைவுக்கு மாற்றலாம். இதனைக் காட்சித் தரவு என்றும் கூறுவர்.

video window : ஒளிக்காட்சிச் சாளரம் : கணினி ஒரு தனிச் சாளரத்தில் காட்டப்படும் என். டி. எஸ். சி. ஒளிக்காட்சி (டி. வி).

vidicon : வீடிக்கோன் : ஒரு தொலைக்காட்சி ஒளிப்பதிவுக் கருவியினுள் இருக்கும் குழாய். இது ஒரு காட்சியின் உருக்காட்சியை மின்னியல் சைகையாக மாற்றுகிறது.

view : காட்சி : ஒரு தரவுத் தளத்தின் உள்ளடக்கங்களை பயன்பாட்டாளருக்கு வழங்குகின்ற முறை. இது, தரவுத் தளத்தில் புலங்களும், பதிவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ள அதேமுறையில் காட்சியில் காட்டப்பட வேண்டியதில்லை. பல்வேறு பயன்பாட்டாளர்களின் தேவைக்கேற்ப தனித்த முறையில் காட்டப்படுகிறது.

viewdata : காட்சித் தரவு : மனைத் தரவு வழங்கீட்டுப் பொறியமைவு. இதன் வழியாகப் பயன்பாட்டாளர்கள், ஒரு மையத் தரவுத் தளத்தை தங்கள் உள்ளூர் தொலைக்காட்சிகளிலிருந்து அணுகலாம். பயன்பாட்டாளர் குறிப்பிட்ட தரவுச் சட்டகங்களைக் கோரலாம். முக்கியமாக, தாங்கள் விரும்பும் தரவுகளை நேரடியாக அணுகலாம். இதனால் நேரம் மிச்சமாகிறது. இந்தப் பொறியமைவின் வாயிலாகப் பயன்பாட்டாளர் வேறு பயன்பாட்டாளர்களுடன் செய்தித்தொடர்பு கொள்ளலாம்.

viewer : காட்சிப்படுத்தி : ஒரு கோப்பின் வெளிப்பாட்டை அதனை உருவாக்கிய பயன்பாட்டுத் தொகுப்பு காண்பிக்கும் அதேமுறையில் திரையில் வெளிப்படுத்தும் ஒரு மென்