பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

video noise

1535

video terminal



video noise : ஒளிக்காட்சி இரைச்சல்.

video overlay card : ஒளிக்காட்சி மேல் மூடி அட்டை : என். டி. எஸ். சி ஒளிக்காட்சியையும் கணினி உருவங்களையும் கலப்பதற்கு அனுமதிக்கும் வரைவியல் கட்டுப்படுத்தி.

video picture : ஒளிக்காட்சி படம்.

videophone : ஒளிக்காட்சி பேசி : படப்பிடிப்பி (camera), திரை (screen), நுண்ஒலிவாங்கி (Microphone), ஒலிபெருக்கி (Speaker) ஆகியவை கொண்ட ஒரு சாதனம். ஒரு தொலைபேசித் தடத்தில் ஒளிக்காட்சி சமிக்கைகள் மற்றும் குரலை அனுப்பவும் பெறவும் திறன் பெற்றது. வழக்கமான தொலைபேசி இணைப்பு வழியாக ஒளிக் காட்சிப் பேசியினால் உறை நிலை சட்ட ஒளிக்காட்சியை மட்டுமே அனுப்ப முடியும்.

video port : ஒளிக்காட்சித் துறை : ஒரு கணினியிலிருந்து திரையகத்துக்கு ஒளிக்காட்சிச் சமிக்கைகளை அனுப்பிவைக்கப் பயன்படும் வடத்தினை இணைக்கும் இணைப்புவாய்.

video RAM : ஒளிக்காட்சி ரேம் : கணினி காட்சித்திரையால் ஏகபோகமாகப் பயன்படுத்தப்படும் ரேமின் பகுதி. மையச் செயலகத்திற்கு தேவைப்படுவது போன்று ஒளிக்காட்சி ரேமைப் புதுப்பிக்கிறது. அது போல, திரை உருவங்களை ஒளிக்காட்சி ரேம் புதுப்பிக்கிறது. ஒளிக் காட்சி ரேமில் நேரடி அணுகல் சேர்ப்பி மொழி நிரல் தொடரின் மூலம் நடைபெறும்.

video server : ஒளிக்காட்சி வழங்கன் : கேட்டதும் கிடைக்கும் இலக்கமுறை ஒளிக்காட்சி மற்றும் அகலக்கற்றை ஊடாடு சேவைகளை ஒரு விரிபரப்புப் பிணையம் வழியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட வழங்கன் கணினி.

video signal : ஒளிக்காட்சி சைகை : ஒரு CRTஇல் ஒவ்வொரு புள்ளியின் அமைவிடத்தையும், ஒளித்திறனையும் குறித்துக் காட்டுகிற தரவுகள் அடங்கிய மின்னியல் சைகை. அத்துடன் ஒரு திரையில் உருக்காட்சியைக் காட்டுவதற்கான நேரச் சைகைகளையும் கொண்டிருக்கும்.

video standard : ஒளிக்காட்சித் தரம்.

video tape : ஒளிக்காட்சி நாடா.

video terminal : ஒளிக்காட்சி முனையம் : உள்ளீட்டுக்கு ஒரு விசைப்பலகையையும், வெளி