பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virtual memory management

1540

virtual path


virtual memory management : மெய்நிகர் நினைவக மேலாண்மை.

virtual monitor : மெய்நிகர் கணித்திரை : மெக்கின்டோஷில், எந்த வகையான முகப்பையும் சேர்த்துச் செயல்படுவது மற்றும் பலவகையான பல்முகப்புகளைப் பயன்படுத்துவது. இரண்டு அல்லது மேற்பட்ட திரைகளில் ஒரே பொருளைக் காட்டுவதும் இதில் அடங்கும்.

virtual name space : மெய்நிகர் பெயர்வெளி : ஒரு பயன்பாடு குறிப்பிட்ட பொருள்களின் இடமறியப் பயன்படுத்தக்கூடிய படிநிலைத் தொடர்ச்சியால் அமைந்த பெயர்களின் தொகுதி. அப்படியொரு பெயர்களின் தொடர்வரிசை, மெய்நிகர் பெயர்வெளியில் அப் பொருளின் இருப்பிடப் பாதையைக் குறிக்கிறது. அக்கணினி அமைப்பில், அப்பாதையில் குறிப்பிட்ட படிநிலையில் பொருள்கள் அமைந்துள்ளனவா என்பது முக்கியமில்லை. (எ-டு) : ஒரு வலை வழங்கனின் மெய்நிகர் பெயர்வெளி என்பது, அந்த வழங்கன் செயல்படும் பிணையத்திலுள்ள அனைத்து யுஆர்எல்களின் முகவரிகளைக் குறிக்கிறது.

virtual network : மெய்நிகர் பிணையம் : ஒரு பிணையத்தின் ஒருபகுதி, பயனாளரைப் பொறுத்தமட்டில் அதனளவில் ஒரு பிணையமாகத் தோற்றமளித்தல். எடுத்துக்காட்டாக, ஓர் இணையச் சேவையாளர் ஒற்றை ஹெச்டீடீபீ வழங்கனில் பல களங்களை (domains) அமைத்து, ஒவ்வொன்றையும் அவர்களுடைய குழுமத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட களப்பெயரின் வாயிலாகவே அணுகுமாறு செய்யலாம்.

virtuai object system (VOS) : மெய்நிகர் பொருள் முறைமை.

virtual path : மெய்நிகர் பாதை : 1. ஒரு கணினியிலுள்ள கோப்பு முறைமையில் ஒரு கோப்பினை அணுகப் பயன்படுத்தப்படும் தொடர் வரிசையான பெயர்கள். அக்கோப்பு முறைமையில் அக்கோப்பின் பாதையைப் போலவே அமைந்திருக்கும். ஆனால், அக்கோப்பு பதிவாகி யுள்ள உண்மையான கோப்பக வரிசையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எடுத்துக்காட்டாக, வழங்கன் கணினியின் பெயரைத் தொடர்ந்து வரும் யூஆர்எல்லின் ஒரு பகுதியை மெய்நிகர் பாதை எனலாம். 2. ஒத்திசையாப் பரிமாற்றப் பாங்கினில் (Asynchro-