பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virus signature

1544

visual Basic For Apllications


தற்போது பரவலாகக் கிடைப்பதால் இதை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

virus signature : நச்சுநிரல் அறிகுறி : ஒரு நச்சுநிரலை அடையாளங் காட்டும் கணினிக் குறி முறை. நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்கள், பாதிக்கப்பட்ட நிரல்களையும் கோப்புகளையும் கண்டறிய, ஏற்கெனவே அறியப்பட்ட நச்சு நிரல்களின் கணினிக் குறிமுறையைத் தேடிக் கண்டுபிடிக்கின்றன.

visible page : தோன்றும் பக்கம் : வெளித்தெரி பக்கம் : கணினி வரைகலையில், திரையில் காட்டப்படும் படிமம். திரைப்படிமங்கள் காட்சி நினைவகத்தில், பக்கம் எனப்படும் பகுதிகளில் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு பக்கமும் ஒரு திரைக்காட்சியைக் கொண்டுள்ளன.

VisiCalc : விசிக்கால்க் : (மின்னணு விரிதாள் நிரல்)  : பிரபலமான மின்னணு விரிதாள் செயல்முறை. ஒரு திரையில் தரவுகளை மின்னணுத் தாளாக அல்லது இணைப்பு அமை விடங்களாகக் காட்டுகிறது. இணைப்பில் மாறியல் மதிப்புருக்களின் அமைவிடங்களுக்கு ஒரு பிரிவினையைப் பயன்பாட்டாளர் பயன்படுத்துகிறார

vision recognition : காட்சி அடையாளம்; பார்த்தறிதல் : கணினிமூலம் படத்தரவுகளைச் செய்முறைப்படுத்தும் முறை. எடுத்துக்காட்டாக : கணினியிலுள்ள செயற்கை அறிவுத்திறன், ஒரு குதிரையின் தொலைக்காட்சி உருக்காட்சியை அடையாளங்கண்டுகொண்டு, அது குதிரை என்று கூறுகிறது. உருக்காட்சிகளை அடையாளங் காண்பது, எந்திரங்களுக்கு மிகச்சிக்கலான செய்முறை.

visual : புலனாதல் : ஒரு ஒளிப்படம், வரைபடம், ஓவியம், பட்டியல் அல்லது வரை கலையைப் பயன்படுத்தி தரவு தொடர்பு கொள்ளுதல்.

visual basic : விசுவல் பேசிக் : விண்டோஸ் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட மைக்ரோ சாஃப்ட் குவிக்பேசிக்கின் மேம்பட்ட பதிவு. விசுவல் பேசிக்கருவிப் பெட்டியில் இருந்து பயன்பாடுகளுக்குப் பொருள்களை இழுத்து வருவதன்மூலம் விண்டோஸ் பணித்தொகுப்புகள் உருவாக்கப்படுகின்றன.

Visual Basic editor : விசுவல் பேசிக் தொகுப்பி.

Visual Basic For Applications : பயன்பாடுகளுக்கான விசுவல்